பக்கம்:ஆடரங்கு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

சிட்டுக் குருவி

வீட்டுக் கொல்லையில் அவரைப் பந்தலின் கீழே சிட்டுக் குருவி கூடு கட்டியிருந்தது. அதை முதல் முதலில் கண்டுபிடித்தவள் சரோஜாதான்.

ராஜி, ராஜி ! பாரேன், வந்து பாரேன்!” என்று கத்திக் கொண்டே அவள் சமையலறைக்குள் ஓடி வந்தாள்.

கண்ட சாதம் வடிக்க உட்கார்ந்த ராஜி, எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டுக் கொல்லைப்பக்கம் ஓடிவிட்டாள். விஷயத்தைக் கேட்டு, ராஜியினுடைய அவசரத்தையும் நான், "சரிதான்! இன்று குழைந்துபோன சாதந்தான் கிடைக்கும்' என்றேன். ராஜி நான் சொன்னதைக் காதில் வாங்காமலே போய்விட்டாள். ஆனால் நானும் அடுத்த நிமிஷமே அவர்கள் இருவரையும் பின்பற்றிக் கொல்லைப் பக்கம் போனேன். "உஸ், உஸ்! என்று அக்காவும் தங்கையும் சைகை காட்ட, நானும் சிட்டுக்குருவியின் கூட்டுக்குள் எட்டிப் பார்த்தேன். அதில், மூன்று சிறிய முட்டைகள் இருந்தன.

அன்று எனக்கு உண்மையிலேயே குழைந்துபோன சாதந் தான் கிடைத்தது. ஆனால் சாதம் குழைந்து போயிருந்தது என்பதைக் கவனிக்க எனக்கு அவகாசமில்லை. நேரமாகிவிட்டது. ரெயிலுக்கு அள்ளி அள்ளிப் போட்டுக்கொண்டு எழுந்து சட்டையை மாட்டிக்கொண்டு வாசல் பக்கம் போன போது, சரோஜா சொன்னாள்:

"கும்பகோணத்தில் நல்லதாக மலிவாய்க் கிடைக்குமாமே, சின்னதா, அழகா,எனக்கு ஒரு குருவிக்கூண்டு வாங்கிண்டு வாங்கோ !"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/13&oldid=1525139" இலிருந்து மீள்விக்கப்பட்டது