பக்கம்:ஆடரங்கு.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சரோஜாவின் சவுரி

125


"சொல்லேன் " என்றாள் கௌரி.

இதற்குள் ரெயில் ஆடுதுறையில் நின்றது. எங்கள் வண்டியில் ஹாட்டும் ஸுட்டுமாக ஒரு மனிதர் ஏறிக்கொண்டார்.

ரெயில் ஆடுதுறையை விட்டுக் கிளம்புகிற சமயம் அவர் கதவுப் பக்கம் நின்றுகொண்டு வெளியே நின்ற யாருக்கோ ஏதோ உத்தரவுகள் கொடுத்துக்கொண் டிருந்தார். யாரோ உத்தியோகஸ்தர் என்று எண்ணினேன்.

சரஸ்வதி சொன்னாள்: "ரொம்பவும் சின்னக் கதைதான். நான் என்ன கதாசிரியையா? ஐந்து நிமிஷக் கதையை ஐந்நூறு பக்கத்தில் சொல்வதற்கு?" என்றாள்.

"ஏது? என் புஸ்தகம் எதையோ படித்திருக்கிற மாதிரியே பேசுகிறீர்களே !" என்றேன் நான்.

என்னைப் பார்த்துச் சிரித்தபடியே சரஸ்வதி சொன்னாள்: " சரோஜாவுக்கும் வார்டனுக்கும் சண்டை எப்படித் தொடங்கியது என்று எனக்குச் சரியாக ஞாபகம் இல்லை! ஏதோ ரொம்பவும் சர்வ சாதாரணமான ஒரு வாக்கு வாதம். அவ்வளவுதான்."

"உங்களுக்கே மறந்து போய்விட்டது என்றால் மிகவும் சின்ன விஷயமாகத்தான் இருக்கவேண்டும்" என்றேன் நான்.

சரஸ்வதி சொன்னாள்: "சரோஜாவுக்கு எப்பவுமே தலையில் கூந்தல் அதிகம் கிடையாது. எங்கள் ஹாஸ்டலில் பல மாணவிகளுக்குக் கூந்தல் நீளமாகவும் அழகாகவும் இருக்கும். அதைப் பற்றி ரொம்பவும் பெருமைப்பட்டுக்கொள்வார்கள். சரோஜாவும் அரை டஜன் சவுரிகளை வாங்கிவைத்து, மாறி மாறி அணிந்துகொண்டு சர்வ ஜாக்கிரதையாகத் தன் நீண்ட கூந்தலைப் பற்றிப் பெருமை பேசிக்கொள்வாள். சக மாணவர்களுக்கே இந்த விஷயம் தெரியாது. முதலில் எனக்கே தெரியாது.

இது வரையில் வண்டிக் கதவண்டையிலேயே நின்று கொண்டிருந்த ஆடுதுறையில் ஏறிய மனிதர் என் பக்கத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/130&oldid=1523819" இலிருந்து மீள்விக்கப்பட்டது