பக்கம்:ஆடரங்கு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

ஆடரங்கு

வந்து உட்கார்ந்துகொண்டார். அவரும் சரஸ்வதி மேலே சொன்ன கதையைக் கேட்டார்.

சரஸ்வதி சொன்னாள்; "சரோஜாவுக்கும் லேடி வார்டனுக்கும் ஏதோ ஒரு சிறு விஷயம் பற்றி வாக்குவாதம் முற்றியது. சரோஜாவைச் சமாதானப்படுத்துகிற முயற்சியில் லேடி வார்டன் அவளுடைய தோள் பட்டையைப் பிடித்தாள். தோள் பட்டை அவள் கையில் அகப்படவில்லை. சரோஜா நகர்ந்துவிட்டாள். அவளுடைய நீண்ட கூந்தல்தான் லேடி வார்டன் கையில் அகப்பட்டது."

"......உ......ம் " என்றேன் நான்.

என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஆசாமியும் கதையைச் சுவைத்துக் கேட்பது மாதிரி இருந்தது.

சரஸ்வதி சொன்னாள்; "அவ்வளவுதான். சரோஜாவின் சவுரி வார்டன் கையில் இருந்தது. அப்போது சரோஜாவுக்கு வந்த கோபத்தைப் பார்க்க வேண்டுமே! அடாடா! அடாடா!" என்றாள் சரஸ்வதி.

இதைச் சொல்லி விட்டு சரஸ்வதி தன் பின்னலை எடுத்து முன்னால் விட்டுக்கொண்டாள். கை விரல்களால் தடவி விட்டுக்கொண்டாள். அவள் பின்னல் சாட்டை மாதிரி நீளமாக மேகம் போல இருண்டிருந்தது.

சரஸ்வதி சொன்னாள்: "சரோஜாவுக்கு உண்மையிலேயே தலை மயிர் ரொம்பவும் குறைச்சல்தான். எலி வால் மாதிரி ஒரு சாண்தான் இருக்கும்!" என்றாள்.

தியாகராஜபுரத்தில் ஒரு நிமிஷம் நின்றுவிட்டு வண்டி கிளம்பியது.

"அப்புறம் ?" என்றேன் நான்.

"சரோஜா வார்டனைப் படாத பாடு படுத்தி வைத்துவிட்டாள். இந்தச் சனியன் விட்டால் போதும் என்று லேடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/131&oldid=1523821" இலிருந்து மீள்விக்கப்பட்டது