பக்கம்:ஆடரங்கு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சரோஜாவின் சவுரி

127

வார்டன் தானாகவே ராஜீநாமாச் செய்துவிட்டுப் போய் விட்டாள்."

"இந்த மெதுவான ரெயிலையும் இவ்வளவு வேகமாகப் போகச் செய்துவிட்டீர்களே, சபாஷ்! அந்த உதவிக்கு என் நன்றி! நான் வருகிற ஸ்டேஷன் நரசிங்கன்பேட்டையில் இறங்குகிறேன்" என்றேன்.

நான் சொன்னதைக் காதில் வாங்காமல் சரஸ்வதி சொன்னாள்: "அந்த சரோஜாவை நான் அதற்கப்புறம் பார்க்கவில்லை. என்ன செய்கிறாளோ தெரியவில்லை" என்று கூறித் தன் தலைப் பின்னலைப் பின்னால் எடுத்து விட்டுக்கொண்டாள்.

என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த, ஆடுதுறையில் ஏறிய ஆசாமி ஏதாவது சொல்லலாமா வேண்டாமா என்று தயங்குபவர் போலச் சிறிது நேரம் இருந்தார். பிறகு சொன்னார்: "அந்தச் சரோஜா என்னைக் கல்யாணம் செய்துகொண்டாள். நான் ஒரு தாவர நூல் ஆராய்ச்சியாளன் " என்று தம்மையே அறிமுகம் செய்துகொண்டார்.

"அப்படியா? உங்களைச் சந்தித்தது பற்றி ரொம்பச் சந்தோஷம். சரோஜா சௌக்கியமா யிருக்கிறாளா? ரொம்ப நாளாகச் சரோஜாவைப் பார்க்கவேண்டும் என்று எனக்கு ஆவல்!" என்று விசாரித்தாள் சரஸ்வதி.

ரெயில் நரசிங்கன் பேட்டையில் நின்றுகொண் டிருந்தது.

ஆடுதுறை ஆசாமி சொன்னார்: "இன்னமும் சரோஜாவுக்கு அதே எலி வால் பின்னல்தான்!" என்று.

கௌரிக்கும் சரஸ்வதிக்கும், "நமஸ்காரம். வரட்டுமா? நான் இங்கே இறங்குகிறேன்" என்றேன்.

கௌரி உட்கார்ந்தபடியே கை கூப்பினாள்.

சரஸ்வதி எழுந்து கை கூப்பினாள். அவள் பின்னல் கண்ணாடி ஜன்னல் தாழ்ப்பாளில் சிக்கிக்கொண்டிருந்ததை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/132&oldid=1523822" இலிருந்து மீள்விக்கப்பட்டது