பக்கம்:ஆடரங்கு.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாத ஸரம்

139

"பரவாயில்லை; நான் கொள்ளிடம் வரையில்தான் போகிறேன்" என்றார் அவர். தந்த இடத்தில் நெருக்கியடித்துக்கொண்டு நானும் ராஜியும் பாப்பாவும் உட்கார்ந்துகொண்டோம்.

"நம்ப ஆத்திலே இருக்காப்லே இங்கேயும் சின்ன 'பான்' இருக்கே?" என்றாள் பாப்பா உயரச் சுற்றிக்கொண் டிருந்த மின்சார விசிறியைப் பார்த்து.

"பேசாதிரு!" என்று பாப்பாவை அதட்டினாள் ராஜி.

"ஏண்டி ! இங்கே எல்லாம் பேசப்படாதா?" என்று கேட்டாள் பாப்பா.

இதற்கு ராஜி பதில் சொல்லுமுன் வண்டிக்குள் ஒரு. காலேஜ் மாணவி வந்தாள். அவள் காலேஜ் மாணவியாகத்தான் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் இந்தச் சிதம்பரத்தில் இப்படி எல்லாம் அலங்காரமாக வேறு யார்? அவள் வண்டிக்குள் வந்ததே அலங்காரமாகத்தான் இருந்தது. அவளுடைய பெட்டி, படுக்கை முதலியனவும் - உபயோகமாகிற சாமான்களோ அல்லவோ - மிகவும் அலங்காரமாகத்தான் இருந்தன.

அந்தக் காலேஜ் பெண்ணைப்பற்றி விவரமாக வர்ணனை செய்யவேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்றே எண்ணு கிறேன். இந்தக் காலத்தில் எல்லா ஊர்களிலும், எல்லாருக்கும் தான் காலேஜ் மாணவிகளின் உருவம் பழக்கமான காட்சியாகிக்கொண் டிருக்கிறதே.

வண்டியில் வேறு யாரும் ஸ்திரீகள் இல்லாததால் என் மனைவி (பாவம்! அவள் கொஞ்சம் கர்நாடகந்தான்!) அந்தப் பெண் தனக்குப் பக்கத்தில்தான் வந்து உட்காருவாள் என்று எண்ணினாள். ஓரத்தில் அவளுக்கு இடம் விட்டு நகர்ந்து கொண்டாள்.

ஆனால் ராஜி ஒதுங்கி நகர்ந்துகொண்டதைக் கவனிக்காதவள் மாதிரியே இருந்துவிட்டாள் அந்தக் காலேஜ் பெண். எதிர் ஸீட்டில் உட்கார்ந்திருந்த நவரத்தின கசிதமான பெரிய மனித

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/144&oldid=1527029" இலிருந்து மீள்விக்கப்பட்டது