பக்கம்:ஆடரங்கு.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாத ஸரம்

143


ராஜி சொல்லுகிறவரைக்கும் நான் கவனிக்கவில்லை, அந்தப் பெண் காலில் பாத ஸரம் அணிந்திருந்ததை. இப்பொழுது பார்த்தேன். எனக்கு என்னவோ, பாத ஸரம் அணிந்துள்ள கால்களுக்கு அழகு கூடியிருப்பதுமாதிரிதான் தோன்றுகிறது! ராஜி அப்படி எண்ணவில்லை என்று தோன்றியது. அதுவும் ஒரு அழகாகத்தான் இருக்கிறது" என்றேன்.

"எந்த நாகரிகத்திலே சேர்த்தியாம் அது?" என்று கேட்டாள் ராஜி.

"என்னைக் கேட்டால்......?" என்றேன் நான், தப்பித்துக் கொள்கிற மாதிரியில்.

“நான் கூடப் போட்டிண் டிருக்கேனே காலில், கொலுஸு" என்றாள் பாப்பா. தன் காலை நீட்டிக் காட்டினாள்.

அந்தக் காலேஜ் மாணவி பாப்பாவைத் திரும்பிப் பார்த்தாள்; சிரித்தாள். பாப்பா வெட்கத்துடன் தன் அம்மாவின் மடியில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.

"இங்கே வாயேன், என்கிட்ட" என்று கூப்பிட்டாள் அந்தக் காலேஜ் பெண்.

பாப்பா தன் வெட்கத்தைச் சமாளித்துக்கொண்டு நிமிர்ந்து பார்த்தாள், சொன்னாள்: "நான் உன்கிட்ட வர மாட்டேன். எங்காத்து லீலா கிட்டத்தான் போவேன்."

"என் பேரும் லீலாதான், வாயேன்" என்றாள் அந்தக் காலேஜ் மாணவி. தன் பெயர் லீலா என்று நாஸுக்காகத் தெரிவித்துக்கொண்டாள் அவள் என்று எனக்குத் தோன்றியது.

"அவள் பேரும் லீலாதானாம் அம்மா" என்றாள், பாப்பா அவள் அம்மாவிடம்.

"கூப்பிடறாளே போயேன்" என்றாள் ராஜி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/148&oldid=1527033" இலிருந்து மீள்விக்கப்பட்டது