பக்கம்:ஆடரங்கு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

ஆடரங்கு

குருவிக் கூண்டு வாங்கித் தராமே இருக்கத்தானே இது வழி !' என்று அழாத குறையாக முகத்தைக் கோணிக்கொண்டாள் சரோஜா.

அசடே! வாங்கித் தரேன்னால் நான் வாங்கித் தருவேன்.பாரேன்!... தவிரவும் புதுக் குருவிக் குஞ்சைப் புதுக்கூண்டிலே அடைச்சாத்தான் நன்னாருக்கும். இப்பவே கூண்டை வாங்கி னால் அது பழசாகப் போயிடுமே!" என்று சரோஜாவுக்கு நான் சமாதானம் சொன்னேன்.

பொறுப்பற்ற சுதந்திரமான எனது வாழ்க்கையிலே எனக்கு உள்ளவை இரண்டே இரண்டு கடமைகள்தாம். முதல் கடமை: ராஜியின் கோபத்துக்கு ஆளாகாமல் தப்புவது; இரண்டாவது, சரோஜாவின் கோப தாபங்களைச் சமாதானம் செய்வது. இந்த இரண்டு கடமைகளை மட்டும் இவ்வுலகில் நான் சரிவரச் செய்து விட்டேனானால், மோட்சம் கிட்டிவிடும் என்று எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.

அதற்கப்புறம் பல நாட்கள் சென்றன. காலண்டர் கணக்குப்படி ஒரு வாரந்தான் ; ஆனால் பேச்சு வார்த்தைகள் கணக்கில் பார்த்தால் ஒரு யுகம்போலத் தோன்றுகிறது.

சதா சிட்டுக் குருவி, அல்லது அது சம்பந்தமான பேச்சுத் தான் வீட்டில். குருவிகளின் பழக்க வழக்கங்கள்,பூனை நாய் போன்றவைகளின் பழக்க வழக்கங்கள் இவைகளை எல்லாம் எங் களுக்குத் தெரிந்தவரையில் ஒத்திட்டுப் பார்த்துக் கொண்டோம். அடுத்த அகத்து வேலைக்காரன் இப்படிச் சொன்னான் என்பாள் ராஜி. அடுத்த அகத்து மாமி அப்படிச் சொன்னாள் என்பாள் சரோஜா. நான் இருவருக்கும் சமாதானமாகப் பதில் சொல்லப் பார்ப்பேன்; சில சமயம் அது இருவரையும் இன்னும் அதிக மாகத் தூண்டிவிடும். அந்த ஒரு வாரத்தில் நான் பறவையினங்களின் வாழ்க்கை ரகசியங்களை எல்லாம் ஒன்றுவிடாமல் அறிந்து கொண்டேன். நான் கற்றுக்கொண்ட விஷயங்களுக்கு எனக்கு ஏதாவது ஒரு சர்வகலாசாலை 'டாக்டர்' பட்டம் கொடுக்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/15&oldid=1525239" இலிருந்து மீள்விக்கப்பட்டது