பக்கம்:ஆடரங்கு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

ஆடரங்கு

ஆனால் பாட்டிக்குத் தெரியாதா குழந்தையின் மனம்? முறுக்குப் பண்ணித் தருகிறேன் என்றாள் ; பச்சைப் பாவாடை தைத்துத் தருகிறேன் என்றாள்; கை நிறையக் காலணாக் காசு தருகிறேன் என்றாள்; காவேரியிலே ஸ்நானம் பண்ணத் தினம் அழைத்துக்கொண்டு போறேன் என்றாள். சரோஜா குதித்துக் கொண்டு பாட்டியுடன் கிளம்பத் தயாராகிவிட்டாள் !

அப்படியும், அவள் குருவிக் குஞ்சை மறந்துவிடவில்லை. "ராஜி, குருவிக் குஞ்சை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கோ. நான் சீக்கிரம் வந்துடறேன் " என்றாள். "எனக்காக இரண்டு குஞ்சையும் கூண்டிலே பிடிச்சுவையுங்கோ. நான் வந்து கேட் பேன் ' என்றாள் என்னிடம்

நான், “ஆகட்டும்" என்றேன்.

மறுபடியும் ஒருதரம், ரெயிலில் ஏறி உட்கார்ந்தபின் அவள் எனக்கு அதை ஞாபகப்படுத்தினாள்.

சரோஜா ஊருக்குப் போனதும், வீடு வெறிச்சென் றிருந் தது. குருவிக் குஞ்சுகளை அடிக்கடி போய்ப் பார்த்துக் கொண்டு ராஜி ஏதோ கொஞ்சம் ஆறுதல் அடைந்துகொண் டிருந்தாள்.

குருவிக் குஞ்சுகளுக்கு மூக்கைத் தவிர வேறு ஒன்றும் சரி யாக உருவடையாத பருவத்தில் ஒரு நாள், நாங்கள் இருவரும் குருவிக் கூட்டண்டை அவரைப் பந்தலின் கீழ் நின்றுகொண் டிருந்தோம். முருங்கை மரக் கிளையில் உட்கார்ந்து ஒரு குருவி உரக்க, அசாதாரணமான குரலில் டிக்டிக்' என்று சப்தம் செய்துகொண்டிருந்தது.

ராஜி சொன்னாள்: "பார்த்தேளா அதிசயத்தை! நாம் கூட்டண்டை வறோம்னு தாய்க் குருவி, 'ஆபத்து, ஆபத்து' என்று கத்தித் தன் குஞ்சுகளை எச்சரிக்கிறது.'

நான், "உம் " என்றேன்.

"நான் சொன்னா உங்களுக்கு நம்பிக்கையாக இல்லையோ ? பின் ஏன் இந்தக் குருவி வழக்கம்போலக் கிறீச்சிடாமல் வேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/17&oldid=1525241" இலிருந்து மீள்விக்கப்பட்டது