பக்கம்:ஆடரங்கு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிட்டுக் குருவி

13

தினுசாகக் கிறீச்சிடுகிறதாம் ? " என்றாள் ராஜி. "ஆமாம், ஆமாம்! நீ சொல்றபடிதான் இருக்கவேண்டும்" சொல்லி விவாதத்திலிருந்து தப்பப் பார்த்தேன்.

"இன்னும் சந்தேகமாயிருந்தால் நான் சொல்லுகிறபடி செய்து பாருங்கள்! இரண்டு பேரும் இப்போ உள்ளே போவோம்; உடனே அந்தக் குருவி கிறீச்சிடுவதை நிறுத்திவிடுகிறதா இல்லையா பாருங்கள்!" என்றாள் ராஜி. "மறுபடியும் திரும்பி வந்தோமானால் மறுபடியும் கிறீச்சிட. ஆரம்பித்துவிடும்' என்றேன்.

வந்தேளா வழிக்கு ?"

"வழிக்கு வராமல் எங்கே போவதாம்?" என்று பதிலளித்தேன் நான். "சரி, சாப்பிடலாமே ! நாழியாகல்லையா ?"

ராஜிக்கு அப்போதுதான் ஞாபகம் வந்தது: "ஐயையோ ! அடுப்பிலே ஈயச் சொம்பைப் போட்டுட்டு வந்துட்டேனே ! என்ன ஆச்சோ !" என்று சொல்லிக்கோண்டே ராஜி இரண்டெட்டில் என்னைத் தாண்டிக்கொண்டு சமையலறைக்குள் ஓடினாள்.

"போயிடுத்தா ஈயச்சொம்பு! என்ன அஜாக்கிரதை ? " என்று எக்களிப்புடன் கூறிக்கொண்டே நானும் அவளைப் பின் தொடர்ந்தேன். இந்தக் காலத்திலே ஈயம் சேர் என்ன விலை விற்கிறது! இவ்வளவு அஜாக்கிரதையாக, அழகாகக் குடித்தனம் நடத்தினால்...

நான் என்னுடைய வாக்கியத்தை முடிக்கவில்லை. கையில் உருகாத ஈயச் செம்புடன் ராஜி நின்றுகொண் டிருந்தாள்.எரிந்துகொண்டிருந்த அடுப்பின்மேல் வைக்காமல் அவள் சிட்டுக்குருவி பார்க்கப் போன அவசரத்தில் கீழேயே வைத்துவிட்டுப் போய்விட்டாள். ஈயச் செம்பு தப்பிற்று. எனக்கு வருத்தந்தான். அவசரப்பட்டுச் சொன்ன சொற்களை வாபஸ் வாங்கிக்கொண்டுதான் ஆகவேண்டும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/18&oldid=1525242" இலிருந்து மீள்விக்கப்பட்டது