பக்கம்:ஆடரங்கு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிட்டுக் குருவி

15

சமயம் வெளிக்கதவை யாரோ உண்மையிலேயே தட்டவே நான் ஒருவழியாக, செத்தேன் பிழைத்தேன் என்று ஓடிவிட்டேன்.

வந்தவருடன் பேசி, அவரை அனுப்பிவிட்டு நான் அரைமணி நேரங் கழித்துத்தான் வீட்டுக்குள் போனேன். சமையலறையில் இலை போட்டிருந்தது. வழக்கத்துக்கு விரோதமாக ராஜி கோபத்திலும் மௌனமாகவே இருந்தாள். ஆனால், இந்தக் கோபமும் மௌனமும் அன்று அதிக நேரம் நீடிக்கவில்லை. சிட்டுக் குருவியைப் பற்றிய ஏதோ ஒரு உற்சாகமான வார்த்தையில் கரைந்து போய்விட்டது.

நாளடைவில் கூட்டிலிருந்த குருவிக் குஞ்சுகள் வளர்ந்து பெரியவையாயின. நாங்கள் கூட்டண்டை போனால் அவை முதலில் வாயைப் பிளக்கும் - தாய்க் குருளிதான் உணவு கொண்டுவந்திருக்கிறது என்ற எண்ணத்தினால், அவற்றின் வாயுந்தான் எவ்வளவு அழகாயிருந்தது! பிறகு கடுகு போன்ற சிறு கண்களை மிரள மீரள கழித்துப் பார்த்துவிட்டு மெல்லிய குரலில் பயத்துடன் கிறீச்சிடும். அந்தக் குரலில்தான் என்ன பயம் தொனித்தது!

'ஐயையோ ! தாய்க் குருவி இரை கொண்டுவந்திருக்கு; உள்ளே வந்துடுங்கோ. அது இரை கொடுத்துட்டுப் போயிடட்டும். இல்லாவிட்டால், இரையில்லாமல் குருவிக்குஞ்சு செத்துப் போய்விடும். பாவம் நமக்குத்தான்" என்று ராஜி என்னை அவசரப்படுத்துவாள். ஆனால் நாள் உள்ளே போய்ப் பத்து நிமிஷமான பிறகுதான் அவள் வருவாள்.

தன் குஞ்சுகளுக்கு உணவு கொண்டுவந்து தருவது தாய்க்குருவியா, தகப்பன் குருவியா என்று எங்களுக்குள் ஒரு நாள் விவாதம் மூண்டது; இன்னமும் அது முடியவில்லை. சிட்டுக் குருவிக் குஞ்சுகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து பெரியவையாகிக் கொண்டிருந்தன.நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக என்கிற தொடர்,பழங்கதையின் எந்தக் கதா நாயக நாயகியையும்விட, என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/20&oldid=1528811" இலிருந்து மீள்விக்கப்பட்டது