பக்கம்:ஆடரங்கு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிட்டுக் குருவி

17

"பாவம்! குருவி வந்து தன் குஞ்சுகளைக் காணோமே என்று தவிக்கிறது!" என்றாள் ராஜி. அவள் குரலிலும் அளவு கடந்த பரிதாபம் தொனித்தது.

சிறிது நேரத்தில் அந்தக் குருவியின் கூக்குரலை அவளால் சகிக்க முடியாமல் போய்விட்டது. "அது நம்மை வாயாரச் சபிக்கிறது. பாருங்களேன். பேசாமல் அந்தக் குஞ்சுகளைக் கொல்லையிலேயே கொண்டுபோய் விட்டுவிட்டு வந்துவிடுங்கள். குருவியின் பாடு; குஞ்சுகளின் பாடு. கொண்டுபோய் விட்டுவிடுங்கள்' என்றாள் ராஜி.

குருவிக் குஞ்சுகளைத் தான் எடுத்து வளர்க்கவேண்டு மென்ற ஆசை, குருவியின் சோகக் குரலைக் கேட்டபின் ராஜீக்கு அற்றுப் போய்விட்டது. எனக்கு அப்படியில்லை. சரோஜாவுக்காக அவற்றை வளர்க்கலாமே என்று தோன்றிற்று."

குருவிக் குஞ்சுகளின் மேல் ஒரு கூடையைக் கவிழ்த்து மூடி வைத்தேன்.

ராஜி இன்னமும் லேசாக ஆட்சேபங்கள் சொல்லிக் கொண்டே யிருந்தாள்.

"சிட்டுக் குருவி வளர்ப்பது ரொம்பவும் சிரமம் என்று அடுத்தாத்துப் பாட்டி சொல்லுகிறாள் என்றாள் ஒருதரம். “பூனை எல்லாக் குருவிகளையுமே தின்று விடுமாமே! " என்றாள். "குருவியைப் பிடித்துக் கூட்டில் அடைத்து வைத்தால் அடுத்த ஜன்மத்தில் சிறைவாசம் செய்ய நேருமாம் " என்றாள் ஒருதரம்.

ஆனால் நான் அதையெல்லாம் காதில் வாங்காமல் சிட்டுக்குருவிகளை அன்று முழுவதும் சிறைப்படுத்தியே வைத்திருந் தேன். பெரிய குருவி அன்று பகல் பூராவும், விட்டு விட்டு, தன் அபயக் குரலை எழுப்பிக்கொண்டே யிருந்தது. முன்னே எங்கள் தோட்டத்தில் பார்த்தே யிராத பல ஜாதிக் குருவிகள் அதற்கு ஒத்துப்பாட வந்து சேர்ந்துகொண்டன. கொல்லைப்

க—2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/22&oldid=1525250" இலிருந்து மீள்விக்கப்பட்டது