பக்கம்:ஆடரங்கு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

மனமாற்றம்

"டாக்டர் இன்று வருவதாகச் சொன்னாரே, வந்தாரோ ? "

" வந்தார், லக்ஷ்மி.

" உம்......லேடி டாக்டரைப் பார்த்தாராமா ?

" பார்த்தாராம்.

" அவள் என்ன சொன்னாளாம் ?

" ஆப்பரேஷன் பண்ணத்தான் வேணும் என்றாளாம்.

" இல்லாவிட்டால் பிரயோசனப்படாது என்றாளாம். "

" ம்......ம்......

" டாக்டரும் ஆப்பரேஷன் பண்ணிக்கொள்வதுதான் நல்லது என்று அபிப்பிராயப்படுகிறார். "

" ம்... ம்......."

" ஒன்றும் பயமில்லை என்றார். ரொம்பச் சின்ன ஆப்பரேஷன்தானாம். "

" பயமில்லேன்னாலும். குளோரபாரம் கொடுத்துத்தானே ஆப்பரேஷன் பண்ணுவா ? ”

"ஆமாம். என்றாலும், பெரிய டாக்டர் தேவை யில்லை என்றார். தானே குளோரபாரம் கொடுப்பதாயும், லேடி டாக்டர் ஆப்பரேஷனைச் செய்துவிடலாம் என்றும் நம்ப டாக்டர் சொன்னார். "

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/24&oldid=1528517" இலிருந்து மீள்விக்கப்பட்டது