பக்கம்:ஆடரங்கு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனமாற்றம்

21


" இப்படிப் பேசிக்கொண்டே யிருந்தால் நான் போறேன்."

" எனக்கு வைரத்தோடு வாங்கிப் போடுவது என்றால் உங்களுக்குப் பணமே அகப்படாது போய்விடும். அவளுக்கு என்றால் அவள் வந்த மறு நாளே எப்படியோ பணமும் வந்து விடும். இளையாளோ, இல்லையோ ? அவள் வரும்போது கையில் செப்பு வளைகளுடனும், கழுத்தில் பித்தளைச் சங்கிலியுடனும் வருவாள். வந்து பத்து நாளைக்குள்ளே அதெல்லாம் பத்தரை மாத்துத் தங்கமாக மாறிவிடும்; உங்கள் ரஸவாதத்தினாலே ! ”

" நீ இப்படித்தான் அசட்டுப் பிசட்டு என்று பேசிக் கொண்டிருப்பயா ?

அசட்டுப்பிசட்டு என்ன ? உலகத்திலே நடக்கிறதைச் சொன்னேன்."

" அப்ப சரிதான். டாக்டரிடம் சொல்லி ஆப்பரேஷன் வேண்டாம் என்று சொல்விவிடச் சொல்லுகிறேன். அதனால் என்ன நஷ்டம் இப்போ ? "

நான் போனப்புறம் என் இடத்திலே வந்து இன்னொருத்தி நன்னா யிருப்பதை நான் பார்த்துக்கொண்டிருப்பேனோ? பாருங்களேன். உங்களையும் உங்கள் இளையாளையும் நான் என்னபாடு படுத்தி வைக்கிறேன்; பாருங்களேன் ” என்று கண்ணைச் சிமிட்டிக்கொண்டே புன்சிரிப்புடன் சொன்னாள் லக்ஷ்மி.

" போடி, அசடே ! " என்றான் சீனிவாசன் செல்லமாக. எங்கே கொஞ்சம் சரியாகப் பேசு. டாக்டருக்குச் சொல்லி அனுப்ப வேணும். என்ன சொல்லியனுப்ப ? "

இவளைச் சீக்கிரம் தீர்த்துவிட்டால் தேவலை என்று இருக்கிறதோ உங்களுக்கு ? "

" மனசு புண்ணாகிற வரைக்குமா கேலி பண்ணிக்கொண்டிருப்பா ? போடி, போ. என்ன பண்ணலாம்? சொல்லு. "

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/26&oldid=1528085" இலிருந்து மீள்விக்கப்பட்டது