பக்கம்:ஆடரங்கு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

ஆடரங்கு

22

" எனக்குப் பயமாயிருக்கு. ஆப்பரேஷன் என்றால், எதிர் வீட்டுப் பெண்ணுக்கு........."

" அதெல்லாம் ஞாபகம் வைத்துக்கொள்ளாதே........"

" அதுதானே ஞாபகம் வருகிறது ! நான் எப்படித் தீர்மானித்து, வேணும் வேண்டாம் என்று சொல்றது ?

" எனக்கு என்னவோ பயமில்லை என்றுதான் தோன்றுகிறது. டாக்டரும் அப்படித்தான் சொல்கிறார். ரொம்பவும் சின்ன ஆப்பரேஷன்தான் ; இதற்கு ஆப்பரேஷன் என்றே பெயர் சொல்வதற்கில்லை என்று சொல்லுகிறார்... "

" பின்னே குளோரபாரம் கொடுப்பானேன் ? "

அது கொடுக்காமே முடியாதாம். இருந்தாலும் அவர் பயப்பட ஒன்றுமில்லை என்கிறபோது....."

"பெட்டி நிறையப் புதுப் புடவை......."

" மறுபடியும் அந்தப் பேச்சை ஆரம்பித்தால் நான் போகிறேன் " என்று சொல்லிவிட்டு. சீனிவாசன் தன் ஆபீஸ் அறைக்குள் சென்று விட்டான்.

சீனிவாசனும் லக்ஷ்மியும் பத்து வருஷங்களுக்குமுன் கல்யாணமான, ஆனால் இன்னும் புது மெருகு அழியாத, இளச தம்பதிகள். அவர்களுடைய புது மெருகு அழியாததற்குப் பல காரணங்கள் இருந்தன - அவர்களுடைய குழந்தை உள்ளங்கள் , அவர்களுடைய நல்ல ஸ்திதி, முதலியன. ஆனால், முக்கிய காரணம் அவர்களுக்குக் குழந்தை பிறக்காதது தான் என்று சொல்லலாம்.

முன் காலத்திலெல்லாம் தம்பதிகளுக்குத் தக்க காலத்தில் குழந்தை பிறக்காவிட்டால்-அது சரியோ தப்போ ! -அவர்கள் ராமேசுவரத்துக்குப் பயணம் கிளம்புவார்கள். இப்போதெல்லாம் குழந்தை பிறக்காவிட்டால்-இதுவும் சரியோ தப்போ, யார்தான் சொல்ல முடியும் ? -டாக்டரைத் தேடிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/27&oldid=1528086" இலிருந்து மீள்விக்கப்பட்டது