பக்கம்:ஆடரங்கு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனமாற்றம்

23

கொண்டு கிளம்பிவிடுகிறார்கள். சீனிவாசனும் லக்ஷ்மியும் வருஷக் கணக்கில் சற்று மெதுவாகவே டாக்டரையும் லேடி டாக்டரையும் தேடிக்கொண்டு கிளம்பியிருந்தார்கள். டாக்டர்களின் முடிவு லக்ஷ்மியின் கர்ப்பப் பையில் ஏதோ சிறிய கோளாறு இருப்பதாகவும், ஒரு சிறிய ஆபரேஷன் செய்து அதைச் சரிப்படுத்திவிடலாம் என்பதுந்தான். இந்த முடிவை டாக்டர் வந்து சீனிவாசனிடம் தெரிவித்துப்போன அன்று காலை தான் மேலே கண்ட சம்பாஷணை தம்பதிகளுக்கிடையே நடந்தது.

லக்ஷ்மிக்கோவெனில், குழந்தைகள் என்றால் அபாரமான வாஞ்சை. அதைத் தீர்த்துக்கொள்ள வேறு வழியில்லாமல் , அவள் தன் கூடக் குடியிருப்பவர்களின் குழந்தைகளை எல்லாம் சீராட்டிப் பாராட்டிப் பொழுது போக்கிக் கொண்டிருப்பாள். " தெருவில் ஆடிவருந் தேனைப் " பார்க்குந்தோறும் பார்க்குந் தோறும், " அள்ளி அணைத்திடவே " அவள் ஆவி துடிக்கும். குழந்தை யில்லாத குறை அவள் மனத்தில் பெருங் குறைதான். ஆனால், ஆப்பரேஷன் என்றாலோ பயமாகவே இருந்தது. தனக்குத் தெரிந்தவர்களில் எத்தனை பேர் ஆஸ்பத்திரியில் இறந்திருக்கிறார்கள் என்று விரல்விட்டு எண்ணிப் பார்த்தாள். எண்ணிக்கை இரண்டு கை விரல்களில் அடங்காதுபோல் இருந்தது. எங்கேயாவது ஒரு துளி ரத்தம், அல்லது ரத்தம்போல ஏதாவது சிந்திக்கிடப்பதைக் கண்டால் அவள் தலை சுற்ற ஆரம்பித்து விடும். பிறருக்குக் காயம் பட்டுவிட்டாலே அவள் மனம் மட்டுமின்றி அவள் உடலும் துன்பப்படும். இப்படிப்பட்டவள் ஆப்பரேஷன் என்றால் பயந்தது இயற்கைதானே ! ஆனால் குழந்தை.....!

சீனிவாசனுக்கும், எப்படியோ, என்ன நேரிடுமோ என்று பயம்தான். இருந்தாலும் ஆப்பரேஷன் செய்துகொண்டு விடுவதே சரி என்று அவன் தீர்மானித்துவிட்டான். ஆனால், இதை அவன் தன் மனைவியிடம் இன்னும் கூறவில்லை. அவளே யோசித்துத் தீர்மானத்துக்கு வரட்டும் என்று இருந்து விட்டான். ஆனால் அடிக்கடி, "டாக்டர் பயமில்லை என்று சொன்னார்; பயமே யில்லை" என்று தனக்கும் தன் மனைவிக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/28&oldid=1528087" இலிருந்து மீள்விக்கப்பட்டது