பக்கம்:ஆடரங்கு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனமாற்றம்

25


மாலை ஐந்தரை மணிக்குச் சீனிவாசன் ஆபீஸிலிருந்து வந்தான். வரும்போதே, " என்ன லக்ஷ்மி? தீர்மானம் ஆயிற்றா ? " என்று கேட்டுக்கொண்டே வந்தான்,

லக்ஷ்மி, சிறிது நேரம் தயங்கிவிட்டுச் சற்று இழுத்தாற் போலேயே பதில் அளித்தாள்: " வேண்டாம். ஆப்பரேஷன் வேண்டாம் என்றே சொல்லிவிடுங்கள் " என்றாள்.

சீனிவாசன் இதற்கு நேரடியாகப் பதில் சொல்லவில்லை. தன் வார்த்தைகளை எதிர்த்து அவன் ஏதாவது சொல்வான் என்று அவன் எதிர்பார்த்தாள். ஏமாந்துவிட்டாள். சற்று நேரம் கழித்துச் சீனிவாசன் சொன்னான்: " இன்று ஷர்லி டெம்பிள் படம் ஒன்று புதிசாக வந்திருக்கிறது. போய்ப் பார்க்கலாம், கிளம்பு."

லக்ஷ்மி, " இன்று வேண்டாம் " என்று சொல்லலாமா என்று எண்ணினாள். ஆனால் சொல்லவில்லை. சற்று யோசித்து, " போகலாம் " என்ற முடிவுக்கே வந்தாள். ஆப்பரேஷனைப் பற்றி ஏதோ ஒரு முடிவுக்கு வந்து அதை வெளியிட்டு விட்ட பின் அவள் மனசிலிருந்து பெரும் சுமை இறங்கி விட்டது போல் இருந்தது. தவிரவும் ஷர்லி டெம்பிள் படம் என்றால் அவளுக்குப் பிடி.க்கும். கால் மணியில் சிளம்பத் தயாராகி விட்டாள்.

சினிமாப் பார்த்துவிட்டு அவர்கள் வீடு திரும்பும்போது மணி பத்துக்கு மேல் ஆகிவிட்டது. கடைத்தெருவில் சுற்றி வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றதில் நேரம் கழிந்துவிட்டது. ஒரு பொம்மைக் கடையில் கண்ட ஓர் அழகான செலுலாயீடு பொம்மையை வாங்கவேண்டும் என்று லக்ஷ்மி பிடிவாதம் பிடித்து வாங்கிக்கொண்டாள். சீனிவாசன் சிரித்தான், “ இதை வைத்துக்கொண்டு நீயும் நானுந்தான் விளையாட வேண்டும் " என்றான். ஆனால், அந்தச் செலுலாயீடு பொம்மை தலையைத் திருப்பித் திருப்பிக் கண்களைப் பரக்க விழித்து உருட்டிச் சிமிட்டிச் சிமிட்டி மூடியதைப் பார்க்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/30&oldid=1528089" இலிருந்து மீள்விக்கப்பட்டது