பக்கம்:ஆடரங்கு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியாசிரியனின் மனைவி

29


“நீங்கள் யோசனை பண்ணியிருக்க லாகாதா? பெண்பார்க்க வந்தபோது, 'இந்தப் பெண், ஏதுடா, நம்மைப்போன்ற உயர் இலக்கியாசிரியனுடைய மனைவியாக இருக்க லாயக்கில்லையே, வேறு எங்கேயாவது பார்க்கலாமே' என்று நீங்கள் சற்றே யோசித்திருக்கவேணும்” என்றாள் காமு.

“ஏதாவது கன்னா பின்னா என்று பேசி என் வாயைக் கிளப்பாதே! எனக்குக் கோபம் வரும்.”

“இலக்கியாசிரியனின் கோபத்துக்கு என்ன மதிப்பு என்று இலக்கியாசிரியனுடைய மனைவியாகிய எனக்குத் தெரியாதா?” என்றாள் காமு புன்சிரிப்புடன்.

“சரி,சரி; உள்ளே போ. தினம் தபாலில் கதை கேட்டு நாலு கடுதாசி வருகிறது. உன்னோடு வெட்டிப் பேச்சுப் பேசிக் கொண்டு போதுபோக்க எனக்கு நேரமில்லை. போ உள்ளே, போ” என்றான் இலக்கியாசிரியன்.

“கைக் காரியத்தை விட்டு வீட்டு வந்து நிற்க நானும் தயாரில்லை. அப்புறம் கிடைக்கிற சோறும் சரியாகக் கிடைக்காது. நீங்கதான் 'காமு 'வைக் கூப்பிட்டேள். வந்தேன்.”

“சரி போ. உன்னைக் கூப்பிட்டது பிசகுதான். போ. கதை கட்டுரை வேணும் என்று கடிதம் எழுதுகிறவர்களுக் கெல்லாம் எழுதித் தர எனக்கு ராவணனைப் போல இருபது கைகள் இருந்தால் கூடப் போதாதுபோல் இருக்கு...” என்று தன் பெருமையைச் சொல்லிக் குறைப்பட்டுக்கொண்டான் சுவாமிநாதன்.

“நீங்கள் இருபது கையிலேயும் எழுதி எழுதிச் சம்பாதித்துப் போட்டால் கூட இந்த ஒத்தைக் குடும்பத்தைச் சரியானபடி சவரக்ஷணை செய்யப் போதுமானது வரப்போவதில்லை. எழுத்து மூலம்...”

சுவாமிநாதன் நிமிர்ந்து ஒரு விநாடி அவள் முகத்தை உற்றுப் பார்த்தான். அதில் வருத்தமும், விசனமும், தெரிந்தனவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/34&oldid=1525144" இலிருந்து மீள்விக்கப்பட்டது