பக்கம்:ஆடரங்கு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியாசிரியனின் மனைவி

33

உறவு கொண்டாடிக்கொண் டிருந்தானோ அவ்வளவுக் கவ்வளவு இப்போது அவற்றினின்றும் ஒதுங்கிவிட்டான். அவனிடத்தில் இவ்வளவு மாறுதல்களையும் ஒன்றன்பின் ஒன்றாகக் கவனித்துக்கொண்டு வந்த காமுவுக்குத்தான் திக்கென்றிருந்தது. மகோன்னதமான இலக்கிய வாழ்க்கையினின்றும் தன் கணவரை நெட்டித் தள்ளிக்கொண்டு வந்து அவரைச் சாதாரண குமாஸ்தா வாக்கிவிட்டது தன் செயலும் சொல்லுந்தான் என்று உணர்ந்து அவள் வருந்தினாள். இந்த மாறுதல்களுக்கெல்லாம் தானே ஆதிகாரணம் என்று அறிந்து அவள் நெஞ்சு, ‘குறுகுறு’த்தது. வேறு என்ன செய்வது? மறுபடியும் எழுத அவரைத் தூண்டுவது என்று முயன்றாள்.

அதெல்லாம் அந்தக் காலம்!“ என்றான் சுவாமிநாதன். ”இந்தப் பத்திரிகாசிரியன்களுக்கெல்லாம் என்ன வேலை? ஏதாவது உத்தியோகத்திலிருப்பவன், இருந்தவன், கன்னா பின்னா என்று எழுதிக் கொடுத்துவிட்டால் அதைப் போட்டு விட்டு ‘ஆஹா, ஊஹு ! ’ என்று குதிப்பார்கள். இரவு, பகல் கண்விழித்து ஜீவகளை ததும்ப யாராவது ஏழை எழுத்தாளன் எழுதிக்கொடுப்பதைப் படித்துக் கூடப் பார்க்காமல் திருப்பி அனுப்பிவிடுவார்கள். தப்பித் தவறிப் பத்திரிகையில் போட்டாலும் சம்மானம் தம்பிடி அனுப்பமாட்டார்கள். எழுத்தாளர்களுக்குப் போட்டியாக நான் இனிமேல் எழுதப் போவதில்லை. இந்தப் பத்திரிகாசிரியர்களுக்கெல்லாம் உதவியே செய்யக் கூடாது. தமிழ்ப் பத்திரிகை உலகம் ஆபாசங்கள் நிறைந்தது. அந்தச் சகதியில் நானும் காலைவிடுவானேன் ? " என்று நீண்ட பிரசங்கம் நிகழ்த்தினான் சுவாமிநாதன்.

“உங்களுக்கு எழுத வராவிட்டால் அதற்காகத் தமிழ்ப் பத்திரிகை உலகமும் இலக்கிய உலகமும் ஊழல்கள் நிறைந்தவை என்று இகழ்வானேன் ? ” என்றாள் காமு.

“எனக்கு எழுத வராது என்றா நினைக்கிறாய்? உம் ? ”

“எழுதுங்களேன், பார்க்கலாம் .”

க—3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/38&oldid=1528814" இலிருந்து மீள்விக்கப்பட்டது