பக்கம்:ஆடரங்கு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியாசிரியனின் மனைவி

35

வந்து இரவு அதைப்பற்றித் தன் மனைவியிடமும் சொன்னான். "நம்மைப்பற்றி அறிந்தவர்கள்தான் யாரோ அந்தக் கதையை எழுதியிருக்கிறார்கள்" என்று அவன் சொன்னான். “யார்- என்று தெரியவில்லை. ' ஐயந்தி 'யின் ஆசிரியன் எனக்குச் சிநேகிதன்தான். இந்தக் கதையை எழுதியது யார் என்று நாளைக்கே எழுதிக் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும்" என்றான்.

‘குமாரி'க்குத் திக்கென்றது. ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், "கதை அவ்வளவு நன்றாக இருந்ததா என்ன ? " என்று கேட்டாள். "நானும் படிப்பேனே ? கொண்டுவந்திருக்கக் கூடாதா ? ” என்றாள்.

" கதை நன்றாகவே இருந்தது " என்று தன் கணவன் சொன்னதைக் கேட்க அவளுக்குப் பரம திருப்தியாக இருந்தது.

குமாஸ்தா சுவாமிநாதன் மறுநாள் பொழுது விடிவதற்கு முன்னரே ' இலக்கியாசிரியனின் மனைவி 'யையும் அதன் ஆசிரியையையும் பற்றி மறந்து போய்விட்டான். குமாஸ்தாவின் வாழ்க்கையில் எவ்வளவோ கவலைகள், வேலைகள், ஆசைகள், நிராசைகள் - கேவலம் ஒரு கதையைப்பற்றி - , அது எவ்வளவு நல்ல கதையானால்தான் என்ன ?--ஞாபகம் வைத்துக்கொண்டிருக்க முடியுமா என்ன?

ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு ' ஜயந்தி 'யில் அதே ' குமாரி ' எழுதிய இன்னொரு கதை வெளிவந்திருந்ததைக் கண்டவுடன் சுவாமிநாதனுக்கு முதல் கதையும் ஞாபகத்துக்கு வந்தது. இந்தத் தடவையும் மறந்துவிடாமல் உடனே உட்கார்ந்து ' ஜயந்தி 'யின் ஆசிரியருக்குக் கடிதம் எழுதினான், யார் அந்தக் ' குமாரி' என்று விசாரித்து. பத்து நாட்களில் ' ஜயந்தி 'யின் ஆசிரியரிடமிருந்து பதிலும் வந்துவிட்டது. புனைபெயர் வைத்துக்கொள்ளும் ஆசிரிய ஆசிரியைகளின் உண்மைப் பெயரை வெளியிட இயலாததுபற்றி வருந்துவதாக ஆசிரியர் பதில் எழுதிவிட்டார்.

அந்தக் கடிதத்தைச் சாமா தன் மனைவியிடம் காண்பித்தான். அவன் சொன்னான்: "யார் என்று சொல்ல இயலா-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/40&oldid=1528815" இலிருந்து மீள்விக்கப்பட்டது