பக்கம்:ஆடரங்கு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

ஆடரங்கு

தாம்! யாராவது இருந்தால்தானே, சொல்ல ! அவனே பெண்ணின் பெயரைப் போட்டுக்கொண்டு எழுதியிருப்பான்; அவ்வ ளவுதான். தமிழ்ப் பத்திரிகை உலகம் மகா மோசமானது;மட்டமானது. அதில் என்ன நடக்கும், என்ன நடக்காது என்று யாரும் சொல்ல முடியாது. புருஷர்களே புடைவை கட்டிக்கொண்டு எழுத வந்துவிடுவார்கள்..."

‘குமாரி' என்பது யார் என்று தெரிவித்துவிடலாமா என்று யோசித்தான் காமு; சற்றுத் தயங்கினான். அதற்குள் சுவாமிநாதன் சொன்னுன்.

" பார் ! ' புடவை கட்டிய புருஷர்கள்' என்று நான் ஒரு கதை எழுதி அனுப்புகிறேன், இன்றே எழுதி அனுப்புகிறேன். அவன் அதை வெளியிடாமல் மட்டும் இருக்கட்டும்; பார்க்கிறேன்.

உறுமிக் கொண்டே சுவாமிநாதன் பேறாவை எடுத்துக் கொண்டு எழுத உட்கார்ந்தான். அன்று ஏதோ லீவு ; ஆபீஸில்லை. அப்படியும் புடவை கட்டிய புருஷர்கள் ' முதல் இரண்டு வாக்கியங்களுக்கு மேல் ஓடவில்லை.

காமு எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டும் கேட்டுக் கொண்டும் ஒன்றுமே வாய்திறந்து சொல்லாமல் புண் சிரிப்புடன் நீன்றள்.

மேலும் இரண்டு மாதங்கன் சென்றன. அந்த இரண்டு மாதங்களில் 'ஜயந்தி'யில் ' குமாரி'யின் கதைகள் இன்னும் இரண்டு வெளியாயின. அவையும் நன்றாகவே இருந்தன என்று சுவாமிநாதன் ஒப்புக்கொண்டான். ஆனால் யாரோ புடைவை கட்டிய புருஷன்தான் அவற்றையெல்லாம் எழுதியிருப்பான் என்று தன் மனத்தில் ஊர்ஜிதம் செய்து கொண்டான்.

ஒரு வருஷத்தில் தங்கள் இதழ்களில் வெளிவரும் கதைகளில் சிறந்ததற்கு நூறு ரூபாய் பரிசு அளிப்பது 'ஜயந்தி ' காரியாலயத்தாரின் வழக்கம். எந்தக் கதைக்குப் பரிசு என்பதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/41&oldid=1528817" இலிருந்து மீள்விக்கப்பட்டது