பக்கம்:ஆடரங்கு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிரகப் பிரவேசம்

றுநாள் பொழுது விடிந்தால், ராவ்பகதூர் நரசிம்ம ஐயருடைய வாழ்நாட்களிலேயே முக்கியமான நாள். அந்தத் தினம், அவர் வாழ்க்கைக்கே ஒரு சிகரம் போல் அமைய இருந்தது.

எந்தக் காலத்திலேயோ-சுமார் முப்பது வருஷங்களுக்கு முன் யாரும் கேள்விப்பட்டிராத ஒரு தாழ்ந்த இலாக்காவில் ஒரு தாழ்ந்த குமாஸ்தாவாக ஆரம்பித்த நரசிம்மன், இப்போது ராவ் பகதூர் நரசிம்ம ஐயர் ஆகியிருக்கிறார். மயிலாப்பூரில் சொந்தமாகப் பங்களாக் கட்டிக்கொண்டு, அதில் குடியேற இருந்தார்-நாளைக்குப் பொழுது விடிந்தால் கிரகப்ட்ரவேசம்.

முந்திய இரவு ஆக வேண்டிய காரியங்களை எல்லாம் அவரே நேரில் நின்று கவனித்தார்; அப்படிக் கவனிக்க வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை என்றாலும், தாமே செய்தார். ராவ்பகதூருக்கு ஓடியாடிப் பணிவிடை செய்யப் போதிய ஆட்கள்-ஒரு பிள்ளையும் உள்பட-இருந்தார்கள். ஆனால், எல்லாவற்றையும் தாமே செய்தால்தான் திருப்தியாக இருக்கும் என்ற எண்ணத்தில், ராவ்பகதூரே வேலைகள் எல்லாவற்றையும் மேற்பார்வை பார்த்தார். பந்தல் போட்டுத் தோரணம், வாழைகள் முதலியவை கட்டுவது முதல், வைதிக காரியங்களுக்கு ஏற்ற சாஸ்திரிகளாகப் பொறுக்கி எடுப்பது வரையில், விருந்துக்குச் சமையல் திட்டம் போட்டுச் சாமான்கள் சேகரிப்பது முதல், அழைப்பிதழ்கள் அனுப்புவது வரையில், எல்லாக் காரியங்களையும் அவரே முன்னின்று பார்த்தார். பகல் முப்பது நாழிகை நேரமும் ஓடியாடி உழைத்து அலுத்தவர்; இரவிலும் வெகுநேரம் கழித்தே படுக்கை போட முடிந்தது.

உடம்பு அயர்ந்து படுத்தவர், படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தாரே தவிர, சரியானபடி தூங்க முடியவில்லை. பல தினு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/44&oldid=1527136" இலிருந்து மீள்விக்கப்பட்டது