பக்கம்:ஆடரங்கு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிரகப் பிரவேசம்

41

நோக்கியவராக, ராவ்பகதூர் நரசிம்ம ஐயர், தமது ஈஸிச்சேரில் வீற்றிருந்தார்.

அவருடைய வாழ்க்கை ஜியார்ஜ் டவுனில் ஏதோ ஒரு சாக்கடைச் சந்தில் ஆரம்பமாயிற்று. சிந்தாதிரிப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூரில் கீழண்டைக்கோடி முதலிய இடங்களிலெல்லாம் தங்கிவிட்டு, அவர் தம்முடைய லட்சிய பூமியாகிய மயிலாப்பூரை-அசல் மயிலாப்பூரை அடைந்துவிட்டார். இங்கே அவர் குடியேறி ஐந்தாறு வருஷங்கள் ஆகிவிட்டன. நாளைக்குச் சொந்த வீட்டில் குடிபுக இருந்தார்.

புதுப் பங்களா-ராவ்பகதூர் நரசிம்ம ஐயரின் கௌரவத்துக்கும் பதவிக்கும் உத்தியோகத்துக்கும் ஏற்ற பங்களா. கட்டிடம் கட்ட மட்டுமே எத்தனையோ ஆயிரக்கணக்காய்ப் பிடித்தது என்று, இந்த விஷயத்தில் கணக்கெடுப்பவர்கள், கணக்கெடுத்திருந்தார்கள். அதைச்சுற்றி அடர்ந்த விசாலமான தென்னந்தோப்பும் தோட்டமும்.

இவ்வளவுக்கும் வேண்டிய பணமெல்லாம் சென்ற ஏழெட்டு வருஷங்களுக்குள்ளாகவே சேர்த்ததுதான் என்பதை ராவ்பகதூர் எண்ணிப் பார்த்தார். அதற்குமுன் அவருக்குச் சம்பளமாகக் கிடைத்துக்கொண் டிருந்த இருநூறு, இருநூற்றைம்பது - பிச்சைக் காசில் அவரால் அதிகமாய் மீதம் பிடித்திருக்க முடியாது. சென்ற ஏழெட்டு வருஷங்களாகத்தான் நரசிம்ம ஐயர், பெரிய உத்தியோகஸ்தர்-- வர் பெயர் அடிக்கடி சர்க்கார் கெஜட்டுகளில் வெளிவர ஆரம்பித்தது. அவர் இலாக்கா விஸ்தரிக்கப்பட்டது. அவர் உத்தியோகப் பதவி, தாண்டிக் குதித்துக் குதித்து உயர்ந்தது. கேட்பானேன் ? சம்பளமும் உயர்ந்தது. தனி ஒர் இலாக்காவுக்கே தலைவரானார் அவர். ஒரு குட்டிச் சர்வாதிகாரியானார். ராவ்பகதூர் பட்டமும் கிடைத்தது. தமக்கென்று சொந்தமாக ஒரு பங்களா மயிலாப்பூரில் நிர்மாணித்துக்கொள்ள வேண்டும் என்று ஓர் ஆசை அவர் உள்ளத்தில் உதித்ததும், சற்றேறக்குறைய இதே காலத்தில்தான். நாலைந்து வருஷங்களுக்குள்ளாகவே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/46&oldid=1527299" இலிருந்து மீள்விக்கப்பட்டது