பக்கம்:ஆடரங்கு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிரகப் பிரவேசம்

47


வானத்திலே விசித்திரங்கள் - ஏக வர்ண விசித்திரங்கள் - நிறைந்திருந்தன.

வீட்டிலும் வெளியேயும் ஜன சந்தடி கேட்க ஆரம்பித்து விட்டது. நாதசுரக்காரர்கள் வந்துவிட்டார்கள். இன்னும் ஐந்து நிமிஷத்தில் அவர்கள் ஊத ஆரம்பித்துவிடுவார்கள். அவர்கள் வாசிக்க ஆரம்பித்தவுடனே எழுந்து ஆகவேண்டிய காரியங்களைக் கவனிப்பது என்று எண்ணினார் ராவ்பகதூர் நரசிம்ம ஐயர்.

இந்த எண்ணம் அவர் மனத்தில் தோன்றியவுடனே, யாரோ குனிந்து அவர் காதண்டையில் வந்து, "ஹோ ! ஹோ !" என்று நகைப்பதுபோல் கேட்டது. அந்த நகையொலி காதின் வழியாகப் புகுந்து தம் உள்ளத்தைப் பற்றிக்கொண்டது போலவும், தம் உடலில் இருந்த ரத்தத்தை எல்லாம் உறிஞ்சிவிட்டது போலவும், அவர் உணர்ந்தார். கைகளையும் கால்களையும் உதறிக்கொண்டு ஈஸிச்சேரிலிருந்து எழுந்திருக்க முயன்றார். முடியவில்லை. யாரோ மார்பிலே ஆணி அடித்து அவரை அசைய வொட்டாமல் தடுப்பதுபோல் இருந்தது.

புதுப் பங்களாவிலிருந்து மெல்லிய இனிய நாதசுர கானம், காலைக் காற்றிலே மிதந்து வந்தது.



 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/52&oldid=1527287" இலிருந்து மீள்விக்கப்பட்டது