பக்கம்:ஆடரங்கு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

பேரன்பு

"இன்னிக்கி ஏதாவது நல்ல ராஜா ராணிக் கதைசொல்லு பாட்டி" என்று சுந்தாப்பாட்டியின் மடிமேல் ஏறி உட்கார்ந்துகொண்டு அதிகாரம் பண்ணினாள் சரோஜா.

" ராஜா ராணிக் கதையா? எனக்குத் தெரிஞ்ச ராஜா ராணிக் கதைகளை யெல்லாம் உனக்குச் சொல்லியாயிடுத்தே| " என்றாள் சுந்தாப்பாட்டி,

" புதுசா ஏதாவது சொல்லேன், பாட்டி !” என்று சரோஜா உத்தரவிட்டாள்.

" புதுசா எனக்கு ஒண்ணும் தெரியாதேடி, கண்ணு !"

" உனக்கா தெரியாது ? பொய் சொல்றே நீ " என்றாள் சரோஜா ஆச்சரியத்துடன். இவ்வளவு பெரிய பாட்டி இப்படிப் பொய் சொல்கிறாளே என்று குழந்தைக்கு ஆச்சரியமாக இருந்தது.

என்ன பதில் சொல்வது என்று அறியாமல் சுந்தாப்பாட்டி சிறிது நேரம் மௌனமாக இருந்தாள்.

" பொய் சொல்லாதே பாட்டி, ராஜா ராணிக் கதை சொல்லு பாட்டி" என்று சரோஜா மேலும் வற்புறுத்தினாள். சுந்தாப்பாட்டி சொன்னாள்.

வெகு காலத்துக்கு முன் ஒரே ஒரு ஊரிலே ஒரு ராஜா இருந்தான். அவனுக்கு அழகிலே சிறந்த ஒரு ராணியும், அறிவிலே சிறந்த ஒரு மந்திரியும் இருந்தார்கள். வீரப்போர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/53&oldid=1528096" இலிருந்து மீள்விக்கப்பட்டது