பக்கம்:ஆடரங்கு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

ஆடரங்கு

அவற்றை அங்கீகரிக்க மறுத்து விட்டார். நவக்கிரகங்களை மேலும் பரிசீலனை செய்தார்: ஏதோ சொல்ல வாயெடுத்தார் ; சற்றுத் தயங்கினார்.

ஆவலே உருவாக நின்ற அரசன், " தாராளமாகச் சொல்லுங்கள். தயங்க வேண்டாம். கிரகங்கள் என்ன சொல்கின்றன? என்று கேட்டான்.

" அப்படிப் பிறக்கும் அந்தக் குமாரனால் நீங்கள் கிழ வயதில் ராஜ்யத்தை இழந்து நாடோடிகளாகத் தேச சஞ்சாரம் செய்ய நேரிடும் " என்றார் ஜோசியர்.

" ஹா ! ” என்றான் அரசன். " பிறகு...... ?" என்று கேட்டான்.

" தங்கள் புத்திரன் இழந்துவிட்ட ராஜ்யத்துக்குப் பதில் இப் பிரபஞ்ச முழுவதுமே பரந்துள்ளதாக மக்களின் மனத்திலே ஒரு சாம்ராஜ்யத்தை ஸ்தாபிப்பான். அன்பு என்னும் நித்யத்துவத்துக்குப் புத்துயிர் கொடுப்பான் அவன் " என்றார் ஜோசியர்.

அண்டையில் நின்ற ராணிக்கு ஜோசியர் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரியவில்லை. ஆனால் அவள் மனம் கனிந்து குளிர்ந்திருந்தது. அரசனுடைய முகமும் ஆனந்தத்தாலும் வியப்பாலும் மலர்ந்தது. தன் பொக்கிஷத்திலிருந்ததை எல்லாம் அள்ளி ஜோசியர் கையில் கொடுக்க விரும்பினான் அரசன். மந்திரி தடுத்தான். ஜோசியரும் அங்கீகரிக்க மறுத்துவிட்டார்.

அக் கிழ ஜோசியர் சொன்னதையே வேதவாக்காக நம்பிக் கொண்டு ராஜாவும் ராணியும் புது உத்ஸாகத்துடன் வாழ்க்கை நடத்தினார்கள். கிழவர் சொன்னபடியே நடக்கவும் நடந்தது.

உலகத்திலுள்ள ஒளி யெல்லாம் திரண்டு உருவெடுத்து வந்ததுபோல அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அவனைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்தார்கள் ராஜாவும் ராணியும். ராஜ குமாரனும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/55&oldid=1528106" இலிருந்து மீள்விக்கப்பட்டது