பக்கம்:ஆடரங்கு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

ஆடரங்கு


ஒரு மானைத் துரத்திப்போய், அதை எய்து வீழ்த்த ஓர் அம்பை வில்லில் பூட்டினான். அந்த நிமிஷமே விதிகுறுக்கிட்டது. மேலும், தெய்வத்தின் தூண்டுதலால், ஓடிக்கொண்டிருந்த மான், சுபாவத்துக்கு மாறாக நின்று திரும்பி ராஜகுமாரனைப் பார்த்தது. அதன் பார்வை அவனுடைய இதயத்தைப் பிளப்பதுபோல் இருந்தது. வில்லும் வில்லில் பூட்டிய அம்பும் கை நழுவிக் காலடியில் விழுந்துவிட்டன. அவற்றைத் திரும்பவும் அரச குமாரன் எடுக்கக்கூட இல்லை.

அந்தக் கண்கள் !...... அவள் கண்களேதான்!" என்று ராஜகுமாரன் தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டது அண்டையில் நின்றவர்கள் காதில் விழுந்தது.

மான் தப்பி ஓடிவிட்டது. அதற்குமேல் அரச குமாரன் வேட்டையில் கலந்துகொள்ளவில்லை. சித்தத்தையும் சிந்தனையையும் பறிகொடுத்தவன்போல அவன் இன்ப மாளிகை திரும்பினான். அவன் கண்களிலே அன்பு ஒளி நிறைந்திருந்தது. அவன் உள்ளத்திலே ஆனந்தம் நிறைந்திருந்தது.

காலக்கிரமத்தில் அவனுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அன்புப் பிணை அவன் நெஞ்சத்தை இன்னும் இறுக்கிப் பிடித்தது. ஒரு காலத்தில் முரட்டு மல்லர்களின் குத்து வரிசைகளில் ஈடுபட்டு நின்ற அவன் இப்பொழுது மல்லிகைப் புஷ்பம் போன்ற மிருதுவான சிறு கரங்களுடன் மல்லுக்கு நின்றான்.

கிழ அரசனும் அவன் தேவியும் ஜோசியனின் வார்த்தைகளை உன்னி உன்னித் துன்பத்திற்கு ஆளாகிக்கொண் டிருந்தார்கள். ஆனால் அவர்களுக்கும் மறதி என்ற ஆறுதல் கிடைத்தது சில சமயம்.

குழந்தை பிறந்து ஒரு வருஷம் ஆவதற்கு முன்னரே தெற்கேயிருந்து செய்தி வந்தது. பெரும் படையைத் திரட்டிக் கொண்டு பகை மன்னன் ஒருவன் படையெடுத்து வந்து கொண்டிருந்தான். அரசகுமாரன் பழைய போர் லக்ஷ்யங்கள் தன் உள்ளத்திலே கொதித்து எழுந்து மூள, ஒரு பெருஞ் சேனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/59&oldid=1528113" இலிருந்து மீள்விக்கப்பட்டது