பக்கம்:ஆடரங்கு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேரன்பு

55

யுடன் பகைவனை எதிர்த்துச் சென்றான். எட்டு மாதங்கள் கடும் போர் செய்து வெற்றியும் பெற்றான். ஆனால் ஜயலக்ஷ்மியின் கோயிலில் வெற்றி விழாக் கொண்டாடி பூஜை செய்யும் போது அரசகுமாரன் இனித் தான் யுத்த காரியத்தில் ஈடுபடுவதில்லை என்று ஜயலக்ஷ்மியின் சந்நிதியிலேயே பிரதிக்ஞை செய்துவிட்டான். கிழ மந்திரியும் அரசனும் இந்தத் திடீர்ப் பிரதிக்ஞையைக் கேட்டுத் திடுக்கிட்டார்கள். ஆனால் அரச குமாரனின் காதலிமட்டும், " நன்று " என்றாள். " நான் வந்த காரியம் பூர்த்தியாக இன்னும் சில நாட்களே உள்ளன போலும் " என்று தனக்குள் கூறிக்கொண்டாள்.

இரண்டொரு வருஷங்களுக் குள்ளாகவே நாலாபக்கங்களிலிருந்தும் பகைவர்கள் படை திரட்டிக்கொண்டு நமது அரசனை எதிர்த்து வந்துவிட்டார்கள். அரசன் கிழவன். அரச குமாரனோ போர்த்தொழில் செய்வதில்லை என்று பிரதிக்ஞை செய்துவிட்டான். நாடு சிறிது சிறிதாகப் பகைவர் வசம் ஆகிக்கொண் டிருந்தது.

" என் ராஜ்யத்தைத்தானே அவர்கள் எடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள் ? எடுத்துக்கொள்ளட்டுமே ! இதற்காக ஏழை மக்களையும், போர் வீரர்களையும் துன்புறுத்துவானேன் ? நான் என்றுமே இந்த ராஜ்ய விஷயங்களிலிருந்து விடுபட்டு நின்றவன்தான் " என்றான் ராஜகுமாரன்.

" பிரியே ! உனக்கு ஏதாவது ஆட்சேபம் உண்டோ, நமது நாட்டை அவர்களிடம் ஒப்பித்துவிட்டு வெளியேற?" என்று கேட்டான் அவன்.

"ஆட்சேபமா ? எதற்கு ? வில்லும் வித்தையும் ராஜ்யமும் என்றும் நமது அன்பிற்குக் குறுக்கேதானே நின்றன?' என்றாள் அவள்.

தானாகவே தன் ராஜ்யத்தைத் தன் பகைவர்களுக்குப் பகிர்ந்தளித்துவிட்டு அவன் வெளியேறி விட்டான்.

அதற்குப் பின்னர் அவன் வெகு நாள் உயிருடன் இருந்தான். கடைசி வரையில் தான் செய்தது அசாதாரணமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/60&oldid=1528115" இலிருந்து மீள்விக்கப்பட்டது