பக்கம்:ஆடரங்கு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

தூக்கம்

நான் போனபோது சுவாமிநாதன் கைகளைப் பின் கட்டாகக் கட்டிக்கொண்டு முன் கூடத்தில் குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டிருந்தார். அங்கே வெளிச்சம் அதிகம் இல்லாததால் எனக்கு அவர் முகம் சரியாகத் தெரியவில்லை. அவர் முகத்தை நான் பார்த்திருந்தேனானால் நிச்சயமாக நான் போன விஷயத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்திருக்க மாட்டேன்.

சற்றுப் பதற்றமாகவே, "ஏன் ஸார்? போயிருந்தேளா? அவர் அகப்பட்டாரா? நான் சொன்ன காரியத்தைப்பற்றிக் கேட்டீர்களா?" என்று கேட்டேன்.

" யாரு ? துரையா ? துரை ஊரில் இல்லை. நேற்றும் போனேன். இன்று அல்லது நாளைக்குத்தான் வருவான் என்று சொன்னார்கள். இன்று பூராவும் எனக்கு வேறு வேலையாகப் போய்விட்டது. உங்கள் விஷயத்தைக் கவனிக்க ஒழியவில்லை. நாளைக்குப் பார்த்து ஏற்பாடு செய்கிறேன். தவிரவும் அன்று நீங்கள் சொன்ன மாதிரியிலிருந்து அப்படி ஒன்றும் அவசரம் இல்லை என்று நினைத்தேன்" என்றார் சுவாமிநாதன்.

சாதாரணமாக எவ்வளவு சின்ன விஷயமானாலுங்கூட வெகு உத்ஸாகத்துடன் பேசும் சுவாமிநாதனா இன்று இப்படிப் பேசியவர் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கேட்ட விஷயத்தில் வேறு விஷயத்தைப் புகவிடாமல்கூட அவரால் பேச முடிகிறதே! ஆச்சரியந்தான் ! நேரடியாகப் பதில் சொல்லி, "போய் விட்டு வாருங்களேன்" என்கிற தோரணையில் அவர் பேசியதைக் கேட்டு நான் பிரமித்துப்போனேன்.

ஆனால், "போய்விட்டு வா" என்று சொன்னால் கூட, போய்விட்டு வரவா? போய்விட்டு வரவா?" என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/62&oldid=1528198" இலிருந்து மீள்விக்கப்பட்டது