பக்கம்:ஆடரங்கு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

ஆடரங்கு


"எப்ப ஸார் வந்தேள்?" என்று என்னைச் சாவகாசமாக விசாரிக்கத் தொடங்கினான்.

சுவாமிநாதன் குறுகிட்டார்: "அவர் இப்பத்தான் வந்தார். டாக்டர் என்ன சொன்னார்? குழந்தையை ஆஸ்பத்திரியிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டாயா ?" என்று கேட்டார்.

அப்படியும் வெங்கிட்டு நேரடியாகப் பதில் சொல்லவில்லை; "ராத்திரி ஆஸ்பத்திரியிலேயே இருக்கட்டும் என்றார் டாக்டர், சாப்பிட்டுவிட்டு என்னை ஆஸ்பத்திரியில் வந்து படுத்துக்கொள்ளச் சொன்னார்" என்றான்.

'குழந்தை உடம்புக்கு என்னவாம்? டாக்டர் என்ன சொன்னார்?

"ஒன்றும் கவலைப்படவேண்டாம், காலையில் சரியாகப் போய்விடும். மருந்து கொடுக்கிறேன் என்று சொன்னார். அவ்வளவுதான்' என்றான் வெங்கிட்டு.

"சாப்பிட்டுவிட்டு நானும் வரேன், ஆஸ்பத்திரிக்கு என்றார் சுவாமிநாதன்.


நீ வர வேண்டாம்னு சொல்லச் சொன்னார் டாக்டர். நீயும் தூங்காமல் குழந்தையையும் தூங்கவிட மாட்டாய் என்று சொன்னார்" என்றான் தம்பி.

அவன் சொன்னது என்னவோ வாஸ்தவந்தான் என்று எனக்குப் பட்டது. ஆனால் அதற்காக இந்தக் குரலில், இத்தகைய பாவத்துடன் அவன் சொல்லியிருக்க வேண்டியதில்லை என்று எண்ணினேன் நான்.

அண்ணாவும் தம்பியும் சாப்பிட எழுந்தார்கள். நானும் கிளம்பினேன், "என் விஷயம் ஒன்றும் அப்படி அவசரமானதல்ல. நாளைக்குக் காலையிலே வறேன். கவலைப்படாதீர்கள்! யயப்படறதுக்கு ஒண்ணுமில்லை என்றேன்.

"பயம் என்ன ஸார்? அதெல்லாம் ஒண்ணும் இல்லை! முதல் சம்பவத்துக்குப் பிறகு எல்லாம் பழக்கமாகிவிட்டது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/65&oldid=1528206" இலிருந்து மீள்விக்கப்பட்டது