பக்கம்:ஆடரங்கு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தூக்கம்

61

ஸார். என் மனசே கல்லாயிடுத்தே !" என்றார் சுவாமிநாதன்.

நான் மாடிப்படி இறங்கிப் போகையில் சுவாமிநாதனின் மனைவி, "என்னவோ, வறவா போறவாகிட்டெல்லாம் அசட்டுப் பிசட்டுன்னு பேசிண்டிருக்கேளே! பொம்மனாட்டிகள், என்னைப் போன்றவா, பயப்படுவா — நீங்க சமாதானம் சொல்ல வேண்டியிருக்கும்! அதற்குப் பதில் நீங்க பயப்படறேள். நான் சமாதானம் சொல்ல வேண்டியிருக்கே!' என்று சொல்லிக்கொண் டிருப்பது என் காதில் விழுந்தது.

அதற்குள் படி இறங்கி வெளியேறிவிட்டேன். சுவாமிநாதன் என்ன பதில் சொன்னார் என்பது என் காதில் விழவில்லை.

வீடு போய்ச் சேர்ந்ததும் எனக்கு என்னவோபோல் இருந்தது. ஒரு வேலையும் ஓடவில்லை. சாப்பிட்டுவீட்டு, 'சுவாமிநாதனைப் போன்ற அறிவாளிகள்கூட இப்படி எல்லாம் காரணம் இல்லாமல் பயப்படுகிறார்களே, இதற்கு ஆதாரம் என்ன ?' என்று சிந்தித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். பயத்துக்குக் காரணம் எதுவும் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் கடவுளின் சித்தம் என்று ஒன்று உண்டென்று ஒப்புக்கொள்ளுகிறவர்கள் அந்தச் சித்தம் எப்படி இருக்குமோ என்னவோ ஏதோ என்று பயப்படுவதிலே அர்த்தம் கொஞ்சம் உண்டு என்றுதான் எனக்குத் தோன்றிற்று. 'ஆசையால் பாசம் ஏற்படுகிறது; பாசத்தால் பயம் ஏற்படுகிறது என்று புத்த தேவன் சொல்லியிருப்பது எவ்வளவு பொருத்தமான விஷயம் என்று சிந்தித்தேன். ஒரு சிறு குழந்தையிடம் அளவற்ற பாசம் வைத்துவிடுகிறான் தகப்பன். அது வளர்ந்து பெரியவனானபின் இப்படி, அப்படி என்றெல்லாம் திட்டம் போடுகிறான். குழந்தை வளர்ந்து பெரியவனான பின்பு அநேகமாகத் தகப்பனின் திட்டங்களை எல்லாம் கவிழ்த்துவிடத்தான் போகிறது. அப்படி இருந்தும் திட்டம் போடுவதை நிறுத்துவதே இல்லை தகப்பன். குழந்தைக்கு உடம்பு சரியாக இல்லாத போதெல்லாம், 'இப்படி எல்லாம் நான் திட்டம் போட்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/66&oldid=1524250" இலிருந்து மீள்விக்கப்பட்டது