பக்கம்:ஆடரங்கு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

ஆடரங்கு

டது தவறோ ! அது கடவுளுக்குச் சவால் கூறுகிற மாதிரி ஆகி விட்டதோ?' என்று எண்ணித் தகப்பனின் மனம் துணுக்குறுகிறது. 'சோதித்தா விடுவார் கடவுள்? சோதிக்கமாட்டார்' என்று மாறி மாறி மனசில் தோன்றிப் பயத்தையும் தெம்பையும் ஊட்டுகின்றது; அதே விநாடியில் முந்திய சம்பவம் ஒன்று ஞாபகம் வருகிறது. அவ்வளவுதான்; மனிதன் தெளிவாகச் சிந்தனை செய்யும் சக்தியை இழந்துவிடுகிறான்.

நான் நினைத்தேன்; வெங்கிட்டு சாப்பிட்டு விட்டு, அண்ணாவுக்கு ஆறுதல் அளிக்கக் கூடிய வார்த்தை ஒன்றுகூடச் சொல்லாமல் டாக்டருடைய நர்ஸிங் ஹோமுக்குக் கிளம்பிவிடுவான். சுவாமிநாதனும் அவனுடன் போய்க் குழந்தையைப் பார்த்துவிட்டு வந்தாலும் வருவார் ; ஆனால் இரவு வீடு திரும்பி விடுவார். டாக்டர் போ என்று வற்புறுத்துவார். தவிரவும் வீட்டில் அவர் மனைவிக்கு யாரும் துணை ல. திரும் வந்து படுக்கையை விரிப்பார், படுப்பார். படுக்கை கொள்ளாது; தூக்கம் வராது; எழுந்து கைகளைப் பின் கட்டாகக் கட்டிக் கொண்டு முன் கூடத்தில் உலாத்துவார். ஈஸிசேரில் சிறிது நேரம் சாய்வார். படிக்கலாமா என்று தோன்றும். விளக்கைப் போட்டு ஒரு புஸ்தகத்தை எடுத்துப் பிரிப்பார்; ஆனால் படிப்பு ஓடாது. இரண்டு நிமிஷங்களுக்கெல்லாம் தூங்கிக்கொண்டிருக்கும் மனைவி விழித்துக்கொண்டு, " என்ன படிப்பு, அர்த்த ராத்திரிக்கு ? விளக்கு, கண்ணைக் குத்தறது! படுத்துக்கோங்கன்னா!" என்பாள். 'எனக்கு மட்டும் தூக்கம் வரவில்லையே! குழந்தையின் தாயாகிய அவளுக்கு மட்டும் எப்படித் தூக்கம் வருகிறது?' என்று ஆச்சரியத்துடன் சிந்தித்தபடியே விளக்கை அணைத்துவிட்டு, சுவாமிநாதன் மீண்டும் ஈஸிசேரில் அமர்வார். மீண்டும் மீண்டும் முதல் குழந்தையையும் இந்தக் குழந்தையையும் பற்றிச் சிந்தனைகள், உருத் தெரியாத சிந்தனைகள் பல எழுந்து அவர் உள்ளத்தில் குமுறும். முதல் நாள் தாம் அதை ஹோட்டலுக்கு அழைத்துப்போய் வடை வாங்கிக் கொடுத்தது தவறு என்று எண்ணுவார். ஆனால் அடுத்த விநாடியே கடவுள் சித்தம் அதுவானால் தாம் வேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/67&oldid=1528207" இலிருந்து மீள்விக்கப்பட்டது