பக்கம்:ஆடரங்கு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தூக்கம்

63

என்னதான் செய்திருக்க முடியும் என்றும் எண்ணுவார். கோழி கூவும்; கிழக்கு வெளுத்துவிடும் |

குழந்தையின் தாய் எப்படியோ நிம்மதியாகத் தூங்கிவிடுகிறாள். இந்த விஷயத்தில் பெண்களை அறிவாளிகள் என்றுதான் சொல்லவேண்டும். அவர்களுக்குக் கற்பனை குறைவு : நம்பிக்கை அதிகம். எந்தக் கஷ்டமும் வருவதற்கு முன் அவர்கள் மனசை அவ்வளவாகப் பாதிப்பதில்லை.

இப்படி எல்லாம் என்ன என்னவோ சிந்தித்துக்கொண்டே நான் பத்தரை மணிக்கெல்லாம் தூங்கிவிட்டேன்.

காலையில் எழுந்திருக்கும்போது மணி எட்டு. அவசர அவசரமாக முகத்தைக் கழுவிக்கொண்டு காபி சாப்பிட்டுவிட்டு, சுவாமிநாதனின் வீட்டை நோக்கிக் கிளம்பினேன்.

சுவாமிநாதன் முன் கூடத்தில் கைகளைப் பின் கட்டாகக் கட்டிக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டிருந்தார்.

"ராத்திரி பூரா நீங்க தூங்கவே இல்லைபோல் இருக்கே!" என்று கேட்டுக்கொண்டே நான் அவர் எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தேன்.

"ஆமாம் ஸார், மனசை எவ்வளவோ திடப்படுத்திப் பார்த்துக்கொண்டும் தூக்கம் வர மறுத்துவிட்டது. படுக்கிறதும், ஈஸிசேரில் சாயறதும், பித்துப்பிடித்தவன் மாதிரி உலாத்துவதுமாக இப்படியே இரவைக் கழித்துவிட்டேன். ஆச்சு, எட்டரை ஆகிறதே! வெங்கிட்டு வந்துவிடுவாள் " என்றார் சுவாமிநாதன்.

" நீங்க இருந்தாலும் இப்படிக் கோழை மனசாக இருக்கக்கூடாது, ஸார்! ஆச்சு ! இதோ வெங்கிட்டு வந்துவிடுவான், குழந்தையையும் எடுத்துண்டு " என்றேன்.

சுவாமிநாதன் பதில் சொல்லவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/68&oldid=1528212" இலிருந்து மீள்விக்கப்பட்டது