பக்கம்:ஆடரங்கு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

ஆடரங்கு


நான் மேலும் சொன்னேன்; "போனிலே வேணுமானால் கூப்பிட்டுக் கேட்கலாமே! உடம்பு சரியாகப் போயிருக்கும்! ஆனால் உங்க கவலையால் உங்களுக்குத்தான் உடம்புக்கு வந்து விடும்போல் இருக்கு!"

"போன்லே கேட்க வேண்டாம்னு பார்த்தேன். அவனா கச் சொல்லப்படாதோ? போன்லே சொல்லாதவன், கவலைப் படுவா ளேன்னு மணி ஒன்பதாச்சே, வரக்கூடாதோ? என்ன தம்பி, ஸார்!" என்று சுவாமிநாதன் சொல்லிக்கொண் டிருக் கும்போது தெருத் திருப்பம் திரும்பி வெங்கிட்டு வந்துகொண் டிருப்பது தெரிந்தது. அவன் மட்டுந்தான் வந்துகொண் டிருந் தான். அவன் கையில் குழந்தையைக் காணோம் என்று கவ னித்த நான் திடுக்கிட்டேன். சுவாமிநாதன் என்ன எண்ணி னாரோ என்று அறியவேண்டி நான் திரும்பிப் பார்த்தேன்.

அவர் ஒரே பாய்ச்சலில் பாய்ந்து தெருவில் ஓடித் தம் தம்பியை விசாரிக்கப் போவார் என்று எதிர்பார்த்த நான் ஏமாந்து போனேன். மூலையில் கிடந்த ஈஸிசேரை இழுத்து என் எதிரில் கொண்டு வந்து போட்டுக்கொண்டு அதில் சாய்ந்துகொண்டார் சுவாமிநாதன்.

இதற்குள் தெருவோடு போய்க்கொண்டிருந்த யாருடனோ வம்வளப்பதற்குத் தாமதித்துவிட்டான் வெங்கிட்டு. சுவாமி நாதன் தம் தம்பியை மனசுக்குள் திட்டினாரோ என்னவோ? ஆனால் அவர் வாய்விட்டு ஒன்றும் சொல்லவில்லை. எது வந்தா லும் வரட்டும், அநுபவிக்கத் தயார் என்று சொல்பவர்போல ஓர் ஆழ்ந்த பெருமூச்சு விட்டார்; கண்களை மூடிக்கொண்டார்.

அரைப் பர்லாங்குக்கு அப்பால் தெருவில் யாருடனோ நின்று உத்ஸாகமாகப் பேசிக்கொண் டிருந்த வெங்கிட்டுவை யும், ஈஸிசேரில் சாய்ந்து கண்களை மூடிக்கொண் டிருந்த சுவாமி நாதனையும் நான் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே உட்கார்ந் திருந்தேன். என்ன சொல்வது, என்ன செய்வது என்று எனக்கு ஒன்றுமே தெரியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/69&oldid=1525278" இலிருந்து மீள்விக்கப்பட்டது