பக்கம்:ஆடரங்கு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தூக்கம்

65


திடீரென்று சுவாமிநாதனின் தலை ஒரு புறமாகச் சாய்ந் தது. அடுத்த விநாடி அவர் குறட்டை விடும் சப்தம் கேட்டது.

வெங்கிட்டு தடதடவென்று மாடிப் படியில் ஏறி வந்து கொண்டிருந்தான். சுவாமிநாதனின் மனைவி மாடிப்படி யண்டை போய், "சப்தம் செய்யாமல் வாயேண்டா ! தூங் கிண்டிருக்கிறார் அவர்” என்று குசுகுசுவென்று வெங்கிட் டுவை எச்சரித்தாள்.

குழந்தையைப் பற்றி அவள் ஒன்றும் விசாரிக்கவில்லை. ஆனால் அவள் விசாரிக்கு முன் வெங்கிட்டு, "மணி டாக்டர் ஆத்துக் குழந்தைகளோடே விளையாடிக்கொண் டிருக்கிறான். உடம்பெல்லாம் சரியாப் போச்சு. டாக்டர் தம் காரில் மத்தி யான்னம் அழைத்துக்கொண்டு வந்துவிடுவதாகச் சொன்னார்" என்று மெதுவாகச் சொன்னது என் காதிலும் விழுந்தது.

 


க—5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/70&oldid=1526911" இலிருந்து மீள்விக்கப்பட்டது