பக்கம்:ஆடரங்கு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

ஆடரங்கு


தாள் அவன் பெண்சாதி. பிறகு யாரையோ இழுத்துக் கொண்டு அவனை விட்டு விட்டுப் போய்விட்டாள்.

ஆனால் அந்தக் காய்ச்சல் அவனை விட்டு வெகுநாள் வரை போக மறுத்தது : மாசக் கணக்காக அவன் தர்ம ஆஸ்பத்திரியில் கேட்பாரின்றிக் கிடந்தான். இதற்கிடையில் அவன் பிரக்ஞை இல்லாமல் கிடக்கும்போது அவன் குடிசையின் சொந்தக்காரன் குடிசையில் இருந்த சொற்ப தட்டுமுட்டுகளையும் வாடகை பாக்கியென்று பறிமுதல் செய்துகொண்டு. போய்விட்டான்.

ஆஸ்பத்திரியிலிருந்து நடைப்பிணமாக வெளியே வந்தான் ஆறுமுகம். உடம்பிலே தெம்பில்லை. ஊரிலே தங்க இடமில்லை. பிழைக்க வழியும் இல்லாமல் போய்விட்டது. கொஞ்ச நாள் மயிலாப்பூரில் ஒரு வக்கீல் வீட்டில் தோட்டக்காரனாக வேலைக்கு அமர்ந்தான். ஆனால், முதல் மாசமே தம் மனைவியைத் திருப்தி செய்யும்படியாகத் தோட்டத்தில் உழைத்து அவனால் பாடுபட முடியவில்லை என்று அவனிடம் சம்பளப் பாக்கியைக் கொடுத்து விட்டு விரட்டி விட்டார் வக்கீல்.

அதுவரையில், குடிப்பதைத் தலைமுறை தத்துவமாக வந்திருக்கும் ஓர் வழக்கமாகச் செய்துவந்த ஆறுமுகம், குடியில் ஓர் இன்பம் - தன் வாழ்க்கையில் வேறு எதிலுமில்லாத ஓர் இன்பம் - இருக்கிறதென்று குடியை நாட ஆரம்பித்தான். அகப்பட்ட வேலையைச் செய்துகொண்டு, கிடைத்ததைச் சாப்பிட்டுவிட்டு, காசு இருக்கும்போது குடித்துவிட்டுப் பட்டணத்துச் சோதாக்களில் ஒருவனாக ஆறுமுகம் தலையெடுத்து இப்பொழுது ஒரு வருஷத்துக்குமேல் ஆகிவிட்டது.

மயக்க வஸ்துக்கள் என்று சொல்லுகிறார்களே குடி, கஞ்சா இவை போன்ற வஸ்துக்களுக்கு மட்டுந்தான் மயக்கந்தரும் சக்தி உண்டென்று சொல்லுவதற்கில்லை. பசிக்கும் மயக்கம் உண்டு, போதை உண்டு. லட்சியம், காமம் இவையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/73&oldid=1528215" இலிருந்து மீள்விக்கப்பட்டது