பக்கம்:ஆடரங்கு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆடரங்கு

3

அந்தமட்டும் சரிதான். மிஸ் ஊரிவசி எவ்வளவு அபூர்வமான, வசீகரமான பாவத்துடன் அவளுடைய வணக்கத்தை ஏற்றுக் கொண்டாள் ? அவளுடைய முகத்திலும் கையிலும் சட்டென்று ஒரு விநாடியில் தோன்றி மறைந்த அசைவுதான் எவ்வளவு அதிசயமானது ! உண்மையிலேயே மிஸ் ஊர்வசியை நாட்டியக் கலையின் சிகரத்தை அடைந்தவள் என்று சொல்லுவதில் தவறில்லை என்பது அந்த ஓர் அசைவிலேயே லஷ்மிக்குத் தெரிந்துவிட்டதுபோல் இருந்தது. இப்படி யோசித்துக்கொண்டே லக்ஷ்மி மெதுவாகத் தன்னுடைய ஆரம்பஸ்தானத்துக்கு நகர்ந்தாள். மிஸ் ஊர்வசியைப் போலத்தானும் ஆகிவிடவேண்டுமென்று அவள் உள்ளத்திலே தோன்றிற்று. இன்று ஆரம்பம், முன்னோக்கி காட்டியமாடி நகர.

இதோ நாட்டியம் ஆரம்பித்துவிட்டது. முதலில் மூன்று பாட்டுக்களுக்கு அபிநயம் பிடிப்பது ரொம்பக் கஷ்டமான காரியம். லக்ஷ்மியின் மனம் அபிநயத்தைத் தவிர வேறு எதிலும் ஓடவில்லை. வரிசைக் கிரமமாகப் பாட்டனார் சொல்லித் தந்திருந்தபடி, தாளம், பாவம் தவறி, விட்டுப் போகாமல் நாட்டியமாடினாள். நாலாவதாகப் பாடப்பட்டது ஓர் எளிய பதம். அது லக்ஷ்மிக்கு மிகவும் பழக்கமானது; நாட்டியமாட ஆரம்பித்த நாட்களிலிருந்து அவளுக்குப் பாடமானது. அதற்கு இசைந்து ஆடிக்கொண்டிருக்கும்போது லக்ஷ்மி மறுபடியும் நாட்டியக் கலையையும், மிஸ் ஊர்வசியையும், சபையைபும் கவனிக்க ஆரம்பித்தாள்.

மிஸ் ஊர்வசி முகத்தில் சலனமே இல்லாமல் உட்கார்ந்திருந்தாள். தன் நாட்டியம் அவளுக்குப் பிடித்திருந்ததா இல்லையா என்று அவள் முகத்திலிருந்து லக்ஷ்மியால் அநுமானிக்க முடியலில்லை. சில சமயம் ஊர்வசியின் கண்கள் சபையில் அவள் அருகில் உட்கார்ந்திருந்த ஒருவருடைய கண்களை நாடித் தேடுவதை லக்ஷ்மி கவனித்தாள். அந்த மனிதர் ஊர்வசியுடன் வந்தவர் என்று லக்ஷ்மிக்கு ஞாபகம் வந்தது. அவர் அபிப்பிராயத்தை அறிய விரும்பியவள் போல ஊர்வசி ஏன் அப்படி அடிக்கடி அவர் முகத்தை நோக்கினாள் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/8&oldid=1528077" இலிருந்து மீள்விக்கப்பட்டது