பக்கம்:ஆடரங்கு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

“நீங்க தூங்கறச்சேதான்”

ன்னவோ பட்டணத்திலே காபி சாப்பிடுகிறேன் என்று சொல்லிக்கொண்டு எல்லோரும் தினம் சாப்பிடுகிறார்கள். காபி என்றால் உசிரு ஸார் எனக்கு' என்கிறார்கள்.

'காபி இல்லாவிட்டால் என்னால் உயிர் வாழவே முடியாது ஸார்' என்கிறார்கள். இவர்கள் சாப்பிடுவதெல்லாம் காபிதான் என்கிற ஞாபகம் போலும் இவர்களுக்கு, பாவம்! பட்டணத் தார் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்!

நல்ல காபி என்றால் என்ன? அதை எப்படிச் சாப்பிட வேண்டும் என்று உங்களுக்குத் தெரிய வேண்டுமானால்....

ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லாதே என்பார் களாம். நான் இங்கே பேரை மட்டும் சொல்லப்போகிறேன்; ஊரைச் சொல்லப்போவதில்லை. இந்தக் காலத்தில் ஊரைச் சொல்லிவிட்டால் நல்ல காபி சாப்பிடலாமே என்று எல்லோ ருமே டிக்கெட் வாங்க எழும்பூருக்கு ஓடிவிடுவார்கள். அந்த ஊரில் ஏதோ விசேஷம்போல் இருக்கிறது என்று இரண்டு வாரம் அந்த ஊருக்கும் சுற்று வட்டப் பிராந்தியங்களுக்கும் டிக்கெட் கொடுப்பதை ரெயில்வேக்காரர்கள் நிறுத்திவிடுவார் கள்; ஆபத்துத்தான்.

ஊரைச் சொல்லமாட்டேன்; பெயரைமட்டும் சொல்லு கிறேன். ராமலிங்கையர் கடைக்குப் போனால் நல்ல காபிமட்டு மல்ல; சுவாரஸ்யமான பேச்சும் கதையும் அநுபவமும் கிடைக்கும்.

கொஞ்சம் பழக்கமானவரைத் தெருவிலே கண்டுவிட்டா ரானால் போதும். ராமலிங்கையர் அந்தப்புரத்துக்குக் குரல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/80&oldid=1528218" இலிருந்து மீள்விக்கப்பட்டது