பக்கம்:ஆடரங்கு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

ஆடரங்கு


கொடுப்பார். 'தேய்ச்ச டவரா டம்ளரிலே காபி 8 பலம், சர்க்கரை டிகாக்க்ஷன் ஜாஸ்தி! எனக்குக் காபி அப்படித்தான் வேண்டும்' என்பார். 'அப்படியே எனக்கும் ஒரு ரெண்டு பலம் காபி' என்பார். நம்மோடு கூடக் காபி சாப்பிட ஆயத்தம் செய்து கொள்வார். 'வேறு ஏதாவது சாப்பிடுகிறீர்களா?' என்று உபசாரம் செய்வார். புத்துருக்கு நெய்யில் செய்த அல்வா இருக்கு' என்பார்.

திடீரென்று "காலிப்பயலே!" என்பார் உரத்த குரலில். இது காபி சாப்பிடத் தன் கடையைத் தேடி வந்தவரை யல்ல என்று ராமலிங்கையர் கடைக்குப் போய்ப் பழகியவர்களுக்குத் தான் தெரியும். 'காலிப்பயலே! என்ன தூக்கம்? உட்கார்ந்த படி தூங்காதே என்று எத்தனை தரம் சொல்றது” என்று அதட்டுவார் பையனை.

அந்தப் பையன் அல்வாவோ வடையோ உங்கள் முன் கொண்டுவந்து வைத்துவிட்டுப் பெஞ்சியில் எதிரில் உட்கார்ந்து கொண்டு, "எங்கே ஸார், இவ்வளவு நாளாக உங்களைக் காணோம்?" என்று விசாரிப்பான். ஏதோ அவ்வளவு அக்கறையாகக் கேட்கிறானே என்று பதில் சொல்லத் தொடங்கி விடாதீர்கள். ஏனென்றால் பையன் அந்தக் கேள்வியைக் கேட்டு விட்டு உடனே அந்த க்ஷணத்திலேயே தூங்கிப்போய்விடுவான். நீங்கள் சொல்வதில் முதல் வார்த்தையே அவன் காதில் விழாது என்பது நிச்சயம்.

ராமலிங்கையர், 'காலிப்பயலே!' என்று முதல் தரம் சொல்லி இரண்டாந்தரமும் சொல்லி, 'டே பயலே?' என்று கூப்பாடு போடும் வரையில் உட்கார்ந்தபடியே நித்திரையில் ஆழ்ந்திருப் பான் அவன். ‘டே பயலே!' என்று அவர் கூப்பிட்டு அவன் விழித்துக்கொண்டவுடனே அவன் கைகள் பழக்க வேகத்தால் தாமாகவே தாடையில் சற்று ஓங்கியே போட்டுக்கொள் ளும். சப்தம் கேக்கல்லியே: ஓங்கி" என்பார் ராமலிங்கையர். இன்னும் சற்று ஓங்கியே போட்டுக்கொள்வான் பையன். அதற்குப் பிறகுதான் நீங்கள் கேட்டது என்னவோ அல்வாவோ தோசையோ காபியோ கொண்டுவரப் போவான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/81&oldid=1527169" இலிருந்து மீள்விக்கப்பட்டது