பக்கம்:ஆடரங்கு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

படித்த பெண்

டெல்லியிலிருந்து சுந்தாப் பாட்டியினுடைய மூத்த பிள்ளையின் பெண் வயிற்றுப் பேத்தி வந்திருந்தாள். வரும்போதேபேத்திக்கும்பாட்டிக்கும்சம்வாதம்ஆரம்பமாகிவிட்டது.

பேத்தியின் பெயர் பத்மாஸனீ. வயசு இருபத்திரண்டாகிறது. கல்யாணம் இன்னும் ஆகவில்லை. மெடிகல் காலேஜீல் படித்துக்கொண் டிருக்கிறாள். இன்னும் இரண்டு மூன்று வருஷங்களில் 'டாக்டர்' என்று போர்டு போட்டு விடுவாள்.

கையில் அழகான சிறு பையும், உதட்டில் அவ்வளவு அழகில்லாத செயற்கைச் சிவப்பும், முகத்தில் பட்டை பட்டையாகப் பவுடரும், குதிகால் உயர்ந்த பூட்ஸுமாக'டாக்டாக்' கென்று நடந்து வந்தவளைச் சுந்தாப் பாட்டி, "வாடியம்மா! துரைசாணியம்மா, வா!" என்று வரவேற்றள்.

"இது நான் எதிர்பார்த்ததை விடப் பெரிய குக்கிராமமா யிருக்கிறதே ! " என்றாள் பத்மாஸனி.அவளுக்குநினைவுதெரிந்து இதுவரை சாத்தனூருக்கு வந்ததில்லை.

"டெல்லியிலே வளர்ந்தாலும் கூடத் துரைசாணியம்மா பிறந்த தெல்லாம் இந்தக் குக்கிராமத்திலேதான்" என்றாள் சுந்தாப் பாட்டி.

சுந்தாப் பாட்டி நடுக் கூடத்தில் போட்டிருந்த ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தாள். சுவரோரமாகப் போட்டிருந்த ஒரு நாற்காலியிலே உட்கார்ந்துகொண்டு பத்மாஸனி தன் பூட்ஸுகளைக் கழற்றினாள். கடைத் தெருவுக்குப் போய்விட்டுத் திரும்பிய நான், "வா பத்மா, வா!" என்று வந்தவளை வரவேற்றேன். பிறகு, "பாட்டியும் பேத்தியும் அதற்குள்ளேயே சிநேகமாகி விட்டாற்போல் இருக்கிறது" என்றேன் தமாஷாக.

பத்மாஸனி சிரித்தாள். "பாட்டியும் நானும் ஒண்ணுதான். அம்மாகூட அடிக்கடி சொல்லுவாளே!” என்றாள். கால்

க—6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/86&oldid=1527296" இலிருந்து மீள்விக்கப்பட்டது