பக்கம்:ஆடரங்கு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

ஆடரங்கு

82 பூட்ஸைக் கழற்றிவிட்டு, ஒரு பூட்ஸில் பட்டிருந்த அழுக்கைத் தன் கைக் குட்டையால் துடைத்தாள். " அப்படி என்னடியம்மா உங்கம்மா என்னைப்பற்றிச் சொல்லியிருக்கிறாள்?" என்று விசாரித்தாள் சுந்தாப் பாட்டி. தலைமயிர் பறக்காமல் இருப்பதற்காக அணிந்திருந்த கறுப்பு வலையை அவிழ்த்துக்கொண்டே பத்மாஸனி மீண்டும் சிரித் தாள்."பாட்டிக்கும் பேத்திக்கும் யார் என்ன சொன்ன போதிலும் கோபமே வராது என்று அம்மா சொல்லுவாள்" என்றாள். "அப்படிச் சொல்லுடி மருத்துவச்சியம்மா!" என்றாள் சுந்தாப் பாட்டி. "அம்மாகூடச் சொல்லுவாள்; "ஊரிலே யாருக்குப் பிரசவம் பார்க் என்றாலும் சுந்தாதான் போவாள். அதே மாதிரி என் பெண்ணும் டாக்டருக்குப் படிக்கிறேன் என்கிறது' என்பாள். நான்கூட உன்னைப் போல லேடி டாக்டர்தான், பாட்டி!” "கோபம் வராத இந்தக் குணசாலியைக் கல்யாணம் பண்ணிக்கொள்கிறவன் மிகவும் புண்ணியவானாக இருக்க வேண்டும். அத்துடன் ரொம்ப ரொம்ப அதிர்ஷ்டக்காரனாகத் தான் இருக்க வேண்டும்." பத்மாஸனி கலகலவென்று சிறித்தாள். "சந்தேகம் என்ன, பாட்டி? ரொம்ப அதிர்ஷ்டக்காரனாகத்தான் இருக்க வேண்டும். லாட்டரியிலே லக்ஷம், இரண்டு லக்ஷம் என்றுயாருக் காவது எப்பொழுதாவது கிடைத்து விடும். ஆனால் அதைவிட அதிர்ஷ்டக்காரனாகத்தான் இருக்க வேண்டும், இந்தப் பத்மா ஸனி பாயைக் கல்யாணம் செய்துகொள்கிறவன். ஏனென்றால் நான் கல்யாணமே செய்துகொள்ளப் போவதில்லையே! ' "அது யாரடி அது, பத்மாஸனி பாய்! பாயாமே பாய்! தலைகாணி, மெத்தையில்லாமே !" என்று கேலி செய்தாள் சுந்தாப் பாட்டி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/87&oldid=1527165" இலிருந்து மீள்விக்கப்பட்டது