பக்கம்:ஆடரங்கு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

படித்த பெண்

83


கோபமே வராத பத்மாஸனிக்குக் கூடக் கோபம் வந்து விடும்போல இருந்தது. ஒரு விநாடிதான் ; அதற்குள்ளாகவே சமாளித்துக்கொண்டு விட்டாள். ஆனால் அதைக் கவனிக்காமல் இருந்துவிடுவாளா சுந்தாப் பாட்டி ? “ கோபமே வராது என்று சொன்னாயே உனக்கு, அதுமாதிரிதானாக்கும் இதுவும் !” என்றாள். "பாரேன்!" “ அதுதான் பார்க்கப்போகிறேனே! இந்த மாதிரி கல்யாணமே பண்ணிக்கொள்ள மாட்டேன் என்று சொன்ன வர்கள் ரொம்பப் பேரை நான் பார்த்திருக்கிறேன் " என்றாள் சுந்தாப் பாட்டி. தன் கைப் பையிலிருந்து சின்ன முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை எடுத்து அதில் தன் முகத்தைப் பார்த்துக்கொண்டு, உதட்டுச் சிவப்பைக் கைக்குட்டையால் லேசாக அழித்து விட்டுக்கொண்டு, பத்மாஸனி சொன்னாள்: "இந்த வீட்டிலே காப்பி - கீப்பி உண்டானால் வரட்டுமே!" என் பெண், எட்டு வயசிருக்கும் அவளுக்கு. வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றவள் உள்ளே போனாள். இரண்டு டம்ளரை எடுத்து வந்தாள். "இதில் காப்பி, இதில் கீப்பி " என்று இரண்டு டம்ளரையும் பத்மாஸனியின் முன் வைத்தாள். சுந்தாப் பாட்டி சொன்னாள்: "இது குக்கிராமம்தானேடி யம்மா ; நீ பல் தேய்த்துவிட்டுத்தான் காப்பி சாப்பிடுவா யாக் கும் என்று நினைத்திருப்பார்கள். "பல் தேய்க்கிறதெல்லாம் குளிக்கும்பொழுதுதான்! "அப்படியா? பூட்ஸைத் துடைக்கிற கைக்குட்டை யாலேயே,உதட்டையும் துடைக்கிற நாகரிகத்தைச் சேர்ந்த தாக்கும் இதுவும் !" என்றாள் சுந்தாப் பாட்டி. தெருக் குழந்தைகளெல்லாம் என் வீட்டில் ஏதோ காரியம் இருக்கிற மாதிரி வந்து வந்து போய்க்கொண் டிருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/88&oldid=1527166" இலிருந்து மீள்விக்கப்பட்டது