பக்கம்:ஆடரங்கு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

ஆடரங்கு

84 அவர்கள் நவயுக நாகரிகத்தை அதிகம் காணாதவர்கள் ; பாவம் ! மாலையில்தெருஸ்திரீகளெல்லோரும்டெல்லியிலிருந்துவங்திருந்த பத்மாஸனியைப் பார்க்க வந்துவிட்டுப் போவார்கள். உண்மையிலேயேசாத்தனூர்,குக்கிராமந்தான்என்றுஎண்ணியவனாக நான் சொன்னேன்: "இரண்டுமே கைநகத்தைக் கடிக்கிற நாகரிகத்தைச் சேர்ந்ததுதான் ! "

பத்மாஸனி தன் கை நகங்களைப் பார்த்துக்கொண்டாள். பளபளவென்று வர்ணம் தீட்டப்பட்டிருந்தன, அவள் நகங்கள்; ஆனால் கடிக்கப்பட்ட நகங்கள்தாம். நான் பின்னும் சொன்னேன், “பாட்டியும் பேத்தியும் இப்படி ஆரம்பத்திலேயே சண்டை போட்டுக்கொள்கிறீர்களே ?" " சண்டையா ராஜா, இதெல்லாம்?" என்றாள் சுந்தாப்பாட்டி. சண்டையில்லை மாமா, சண்டையில்லை. ஒருவரை ஒருவர்" அறிமுகம் செய்துகொள்ளுகிறோம்" என்றாள் பத்மாஸனி. பிறகு என்னைப் பார்த்து ஆங்கிலத்தில் சொன்னாள்: "இந்தப் பாட்டி ரொம்ப ரொம்பக் கெட்டிக்காரி என்று "எங்கம்மா சொல்லுவாள். நான் பேசுகிறதெல்லாங்கூட இந்தப் பாட்டி மாதிரியேதான் பேசுகிறேன் என்று சொல்லுவாள் " என்றாள். பத்மாஸனி இதை என்னிடம் சொன்னதில் தவறில்லை.. ஆனால் இதை ஆங்கிலத்தில் சொன்னதுதான் தவறு. சுந்தாப் பாட்டிக்குப் புரியக்கூடாது என்றால் ஆங்கிலமும் ஹிந்தியும் தவிரவேறுஎந்தப்பாஷையில்வேண்டுமானாலும்சொல்லியிருக்கவேண்டும். சுந்தாப்பாட்டி ஆங்கிலம் பேசமாட்டாள் ; ஆங்கில வார்த்தைகளைக் கூட அதிகம் உபயோகப்படுத்த மாட்டாள். ஆனால் யார் என்ன பேசினாலும் புரிந்துகொண்டு விடுவாள். மிடில் ஸ்கூல் ஹெட்மாஸ்டரின் மனைவியாக நாற்பது வருஷம் வாழ்க்கை நடத்தியவள் அல்லவா? அதிலும் வீட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/89&oldid=1527266" இலிருந்து மீள்விக்கப்பட்டது