பக்கம்:ஆடரங்கு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

படித்த பெண்

85

லேயே நடந்த ஸ்கூல். தவிரவும் அந்தக் காலத்து மிடில் ஸ்கூல் என்றால்...... மிடில் ஸ்கூல் ஆங்கிலப் பரீக்ஷைத் தாள்களுக்கு' இந்தக் காலத்து பி. ஏ. மாணவன் கூட விடை எழுதத் திணறி விடுவானே !

நான் பத்மாஸனிக்கு எதுவும் பதில் சொல்லாமல், சுந்தாப் பாட்டியைப் பார்த்தேன். சுந்தாப் பாட்டி சொன்னாள்: தஸ் புஸ்னு நீ படித்திருக்கிற இங்கிலீஷிலே இரண்டு வார்த்தை பேசிவிட்டால், நான் பயந்து போய்விடுவேன் என்றுநினைத்தாயா? நீயும் கெட்டிக்காரிதான் - நானும் கெட்டிக்காரிதான்-உங்கம்மாவும் கெட்டிக்காரிதான். உனக்குப் பிறக்கப்போகிற பெண், பேத்தி, எல்லாருமே, உன்னைப் போலவும் என்னைப்போலவும் கெட்டிக்காரியாகத்தான் இருப்பார்கள் |" பத்மானி பதில் சொல்லவில்லை. "டில்லிக்குப் போனால் என்ன? அதற்கப்பால் சீமைக்குப் போனால்தான் என்ன? பிறந்து நாலு வருஷம் இந்தக் கால்களிலே படுத்துக்கொண்டு, எண்ணெய் தேய்க்கிற போதெல்லாம் 'வராட்டு வராட்டு' என்று முகம் சிவக்க அழுத ஜன்மந்தானேடி யம்மா இது!" என்றாள் சுந்தாப் பாட்டி, பத்மாஸனி இதற்குப் பதில் சொல்லவில்லை. சுந்தாப் பாட்டியுடன் பேசுவதென்பது அவளுக்கு ஒரு புதிய அநுபவமாக அமைந்துகொண் டிருந்தது. "இந்தக் கொள்ளுப் பேத்திக்குப் பெண் பிறந்தாலும், நீதானே பாட்டி எண்ணெய் தேய்த்துவிடப் போகிறாய் ? என்றேன் நான். "நானா? நான் அதுவரையிலும் இருப்பேன். அதற்கப்புறம் அந்தப் பேத்திக்குப் பேத்தி பிறக்கிற வரைக்குங்கூட இருப்பேன். ஆனால் டாக்டருக்குப் படித்து பெரிய மருத்துவச்சி யாகிவிட்ட துரைசாணியம்மா, தனக்குத்தானே பிரஸவம் பார்த்துக்கொண்டு விட்டாலும் பார்த்துக்கொண்டு விடுவாள் ! இந்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/90&oldid=1528821" இலிருந்து மீள்விக்கப்பட்டது