பக்கம்:ஆடரங்கு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

ஆடரங்கு

தக் கர்நாடகத்தைக் கிட்ட, அண்டவிடுவாளோ, என்னவோ?" என்றாள் சுந்தாப் பாட்டி.

"குறைப்பட்டுக்கொள்ளாதே பாட்டி, உனக்காகவாவது நான் கல்யாணம் பண்ணிக்கொண்டு அடுத்த வருஷமே பிள்ளையைப் பெற்றுக்கொள்கிறேன்" என்றாள் பத்மாஸனி. இதைச் சொல்லிவிட்டுக் கலகலவென்று சிரித்தாள்.

நானும் சொன்னேன் : "ஆமாம் பாட்டி, நீ குறைப்பட்டுக் கொள்ளாதே! பத்மாஸனி படித்த பெண்தான் என்றாலும், நம் வீட்டுப் பெண் இல்லையா? ஏதாவது கொஞ்சம் நல்ல குணங்களும் இருக்கும் என்றேன்.

"நல்ல குணங்கள் நாலு பழகிக்கொண்டு போகலாம் என்றுதானே, லீவுக்கு இரண்டு மாசம் பாட்டியிடம் தங்கிவிட்டுப் போக வந்திருக்கிறேன் என்றாள் பத்மாஸனி. “ஏன் பாட்டி! இந்தப் படித்த பெண்களெல்லாமே......!" என்று நான் ஆரம்பித்தேன். "நிறை குடம் தளும்பாதடி, தளும்பாது! நிறையாத குடந்தான் தளும்பும். எனக்குக்கூட, அந்தக் காலத்திலேயே ஒருத்தி, மாட்டுப் பெண்ணாக வந்து வாய்த்தாளே, அவளும் படித்த பெண்தான் ...” என்று ஆரம்பித்து நிறுத்தினாள் பாட்டி.

"கதையா பாட்டி? சொல்லு” என்று கேட்டவாறே பத்மாஸனியும் பாட்டியின் பக்கத்தில் ஊஞ்சலில் உட்கார்ந்து, கொண்டாள்.

"கதையில்லையடி அம்மா, கதையில்லை!" என்றாள் பாட்டி.

“சொல்லு, பாட்டி!" என்றேன்.

ஊஞ்சலை லேசாக ஆட்டிக்கொண்டே சுந்தாப்பாட்டி சொன்னாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/91&oldid=1528820" இலிருந்து மீள்விக்கப்பட்டது