பக்கம்:ஆடரங்கு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

படித்த பெண்

87


"எனக்கு ஸ்ரீனிவாசன், ஸ்ரீனிவாஸன் என்று உருப்படாத பிள்ளை ஒன்று இருந்தது. பெயர் மட்டும் லக்ஷ்மிகரமாக இருந்ததே தவிர அவனிடம் மூதேவிதான் குடியிருந்தாள். அப்பாவுக்கோ அம்மாவுக்கோ வீட்டிலிருந்த மற்றப் பெரியவர்களுக்கோ சிறிதும் அடங்காத பிள்ளை.

குழந்தையாக இருக்கும்போது முதலே வீட்டிலேயும் வெளியிலேயும் அவனுக்கு எப்போதும் ஓயாத ஒழியாத சண்டைதான். அவன் உடம்பில் காயமில்லாத நாள் கிடையாது. ஊர் வம்பு, ஊர்ச் சண்டை எல்லாவற்றையும் விலை கொடுத்தும் விலை கொடுக்காமலும் வாங்கி வந்து விடுவான். அவனை நம்ம வீட்டுப் பிள்ளை என்று சொல்லிக்கொள்ளவே வெட்கமாக இருக்கும்.

கெட்டிக்காரன்தான். ஆனால் அவனுக்குப் படிப்பே வரவில்லை. பள்ளிக்கூடத்து வாத்தியார் வீட்டுப் பிள்ளைக்கே பாடமும் படிப்பும் வரவில்லையே என்று ஊரார் கேலிசெய்தார்கள்.

கல்யாணம் பண்ணி வைத்தாலாவது பையன் திருந்திவிட மாட்டானா என்று எனக்கும் உங்கள் கொள்ளுத் தாத்தாவுக்கும் ஆசை. அவனுக்குப் பத்து வயசு நடக்கும்போதே ஒரு நல்ல இடத்தில் பார்த்துக் கல்யாணம் செய்துவிட்டோம். பிரபலமான ஒரு பண்டிதர் வீட்டுப் பெண் - சாஸ்திர விற் பன்னர் வீட்டுப் பெண் - அலமேலு என்று பெயர். கல்யாணத்தின்போது அவளுக்கு ஏழு வயசு இருக்கும்.

கல்யாணமான பிறகுங்கூட ஸ்ரீனிவாஸன் அப்படி ஒன்றும் திருந்திவிடவில்லை. பாடம்,படிப்பு ஒன்றுமில்லாமல் தத்தாரி யாகத் திரிந்துகொண் டிருந்தான். துடுக்கும் குறையவில்லை அவனுக்கு; திமிரும் ஏறிக்கொண் டிருந்தது. ஊரிலே அவன் அடிபடாத நாளே கிடையாது. வாத்தியார் வீட்டுப் பிள்ளை என்று எத்தனை நாள்தான் எத்தனை பேர் சலுகை தருவார்கள் ? என்றைக்காவது உயிருக்கே ஆபத்து வந்துவிடப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/92&oldid=1523730" இலிருந்து மீள்விக்கப்பட்டது