பக்கம்:ஆடரங்கு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

ஆடரங்கு

போகிறதே என்று நான் மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டுதான் இருந்தேன்.

வயசு ஆக ஆக அவனுடைய அக்கிரமங்கள் அதிகரித்துக் கொண்டிருந்தன. 'நம்மாலாகாது; மனைவி வந்த பிறகு திருந்துகிறானா, பார்க்கலாம்!" என்று அலமேலுவை வரவழைத்து வைத்துக்கொண்டேன். அப்போது அவளுக்கு வயசு பதின்மூன்று இருக்கும்.

பெண்டாட்டி வீட்டுக்கு வந்தபிறகுங்கூட ஸ்ரீனிவாஸன் திருந்தவில்லை. அப்படியேதான் இருந்தான். அலமேலு அழகி, அறிவுள்ளவள்தான். ரொம்பவும் அடக்கமானவள், அவன் நம் வீட்டுக்கு வந்து நாலைந்து வருஷங்களுக்குப் பிறகுதான் எனக்கே தெரியும் — அவள் தகப்பனார் பண்டிதர் அல்லவா? தமிழும் சம்ஸ்கிருதமும் முறையாகத்தன் பெண்ணுக்குச் சொல்லித் தந்திருந்தார். படித்ததிலே பெருமை உண்டு அந்தப் பெண்ணுக்கு; ஆனால் ஜம்பம் இல்லை. குணங்களிலும் அறிவிலும் நிறைந்திருந்தாள் அவள்.

என் மூத்த பிள்ளைக்கும் மூன்றாவது பின்ளைக்கும் சர்க்கார் இலாக்காக்களில் வேலையாயிருந்தது. அவர்கள் தங்கள் குடும்பங்களுடன் ஊர் ஊராகச் சென்றுகொண்டிருந்தார்கள். இருந்ததை வைத்துக்கொண்டு கிராமத்தோடு பழைய ஆளாகவே முப்பது வயசு இருந்தான் ஸ்ரீனிவாசன். ஊர்வம்பு, ஊர்ச் சண்டை, கோர்ட்டு விவகாரம்—இதுதான் அவனுக்கு ஆயுசுள்ள வரையில் வேலை. அவனுக்கு ஒரே ஒரு பிள்ளைதான் பிறந்தது. அந்தப் பிள்ளை பிறப்பதற்கு முன் என் கணவர் இறந்துவிட்டார். அலமேலுவின் தகப்பனாரும் இறந்துவிட்டார்.

என் வீட்டிலே லக்ஷணமாக அலமேலு பதினைந்து பதினாறு வருஷங்கள் இருந்தாள். பிறகு ஸ்ரீனிவாஸன் திடீரென்று ஏதோ ஜுரத்தில் அல்பாயுஸாகப் போய்விட்டான். மீளாத அந்தத் துக்கத்தில் விழுந்த பிறகுதான் அலமேலுவின் அரிய குணாதிசயங்கள் எனக்கே சரிவரத் தெரிய வந்தன. தன்னுடைய ஒரே பிள்ளையை வைத்துக்கொண்டு இதே அக்கிரகாரத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/93&oldid=1525118" இலிருந்து மீள்விக்கப்பட்டது