பக்கம்:ஆடரங்கு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

படித்த பெண்

89

அலமேலு நாலைந்து வருஷம் இருந்தாள். பிறகு அந்தப் பிள்ளை மேல் படிப்பு படித்தது. —நல்ல வேளை படிப்பில் அது அம்மாவைக் கொண்டிருந்தது; அப்பாவைக் கொண்டில்லை.

அந்த அலமேலுவைப் போலப் படித்த பெண்ணையும் நான் பார்த்ததில்லை ; அடக்கமான பெண்ணையும் நான் பார்த்ததில்லை.

****

தையைச் சொல்லி முடித்ததும் சுந்தாப் பாட்டியின் கண்களிலே நீர் துளித்திருந்ததை நான் கவனித்தேன். எனக்குப் பெரியப்பா ஸ்ரீனிவாசன் கதை தெரியும். எதற்காக அதை இப்போது சுத்தாப்பாட்டி தன் கொள்ளுப் பேத்திக்குச் சொன்னாள் என்று எனக்குப் புரியவில்லை.

பத்மாஸனி கேட்டாள் : " அது சரி, அலமேலு படித்தவள்தான். ஆனால் அவள் படிப்பெல்லாம் பயனடையவில்லையே!"

"பல் துருத்திக்கொண் டிருக்கிற மாதிரி படிப்பும் துருத்திக் கொண்டிருந்தால்தான் பிரயோசனப்பட்டதாக அர்த்தமோ? என்று கேட்டாள் சுந்தாப்பாட்டி.

துருத்த வேண்டாம். ஆனால் மூடனைத் திருத்த முடியாத படிப்பு...?"

"உனக்கு ஒரு மூடன் புருஷனாக வரணும். அவனை நீ திருத்துகிறதை நான் பார்க்கணும்" என்றாள் சுந்தாப்பாட்டி.

அது சரி, பாட்டி ! இருந்தாலும் உன் கதை என்னவோ எனக்குத் திருப்தியாக இல்லை " என்றாள் பத்மாஸனி.

நான் என்ன?உன்னைப்போல் புஸ்தகம் படித்தவளா? கதை சொல்ல எனக்கென்ன தெரியும் ? நம் வீட்டுக் கதை ஒன்றைச் சொன்னேன் " என்றாள் சுந்தாப்பாட்டி. ஒரு நிமிஷம் கழித்து அவள் சொன்னாள்: "'இந்தக் காலமானால் விவாகரத்து, ஜீவனாம்சம் என்று அமர்க்களப்படும். அந்த நாளில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/94&oldid=1523833" இலிருந்து மீள்விக்கப்பட்டது