பக்கம்:ஆடரங்கு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

ஆடரங்கு

அடக்கமாக இருந்து குப்பை கொட்டி, மூடனான ஒரு கணவனுடன் வாழ்ந்து பிள்ளையைப் பெற்றெடுத்துப் படிக்க வைத்து..........

"சரி, இப்போது அந்த அலமேலுவும் அவளுடைய பிள்ளையும் எங்கே இருக்கிறார்கள்?" என்று கேட்டாள் பத்மாஸனி.

அலமேலுவின் பிள்ளைக்குப் பெயர் உங்கள் கொள்ளுத் தாத்தா பெயர்தான். சீமைக்கெல்லாம் போய்விட்டு வந்து இப்பொழுது ஒரு மெடிகல் கல்லூரியில் பிரபலப் பேராசிரியராக இருக்கிறான் " என்றாள் சுந்தாப் பாட்டி.

"யாரு? மெடிகல் கல்லூரியிலா? டாக்டர் சுப்ரமணியனா? ஆமாம், இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன்னாடிகூடப் பத்திரிகைகளில் அமர்க்களப்பட்டதே! எனக்குக்கூட ஞாபகம் இருக்கிறது! என்றாள் நெற்றியை அழகாகச் சுளித்துக் கொண்டு பத்மாஸனி.

"நாளைக்கு அம்மாவும் பிள்ளையும் இங்கே லீவுக்குத் தங்குவதற்காக வருகிறார்கள் ' என்றாள் சுந்தாப் பாட்டி.

"ஏது? எனக்குக் கூடத் தெரியாதே" என்றேன் நான். விஷயம் புரிய ஆரம்பித்தது எனக்கு.

"ஏதேது, என் லீவு வீணாகப் போகாது என்றாள் பத்மாஸனி.


"வீணாகப் போகிறதாவது? லீவு கல்யாணத்திலேதான் முடியும்.சுந்தாப் பாட்டி மனசு வைத்தால் அதற்கப்புறம் அதிலேயிருந்து யாராவது தப்ப முடியுமா?" என்று கேட்டுக் கொண்டே சமையல் உள்ளே யிருந்து என் மனைவி வந்தாள்.

பத்மாஸனி, "யாருக்குக் கல்யாணம்?" என்று கேட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/95&oldid=1523834" இலிருந்து மீள்விக்கப்பட்டது