பக்கம்:ஆடும் தீபம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



116

ஆடும்


அடைந்தார். அவள் சட்டென்று தலைகவிழ்ந்தாள். அவர் அந்த முகத்தை நிமிர்த்தினார். அந்தச் செயலே அடங்கியிருந்த அவளது துயர உணர்வைத் தட்டி எழுப்பிற்று. ஆயினும் அவள் உணர்ச்சியோடு போராடினாள். மேல் வரிசைப் பற்களால் கீழுதட்டைக் கடித்துக்கொண்டாள். சிரிக்க முயன்றாள். அழுகை சிரிப்பாக மாறினால் எப்படியிருக்குமோ, அப்படி அசடு வழிந்தது. முகம் நிமிர்ந்தபடி இருக்க, கண்கள் நிலத்தை நோக்கிக் கொண்டிருந்தன.

ராஜநாயகம் அவள் நிலை கண்டு திடுக்கிட்டார். “'என்னம்மா இது? ஏன் என்னவோ போல் இருக்கே?’ என்று பரிவுடன் கேட்டார்.

“ஒண்ணும் இல்லீங்க,’’

இல்லே; என் கிட்டே எதையோ நீ மறைக்கிறே. உன் மனசிலே ஏதோ எண்ணங்கள் புரண்டுகிட்டிருக்கு. இதோ பார் அல்லி. இப்பவும் ஒண்ணும் முழுகிப் போயிடலே. இந்த விநாடியிலே நீ ஒரு வார்த்தை சொன்னா இப்பவே இந்த ஏற்பாட்டை நான் நிறுத்திடுறேன். உன்னோட சந்தோஷம் ஒண்ணு தான் எனக்கு முக்கியம்.’’

ராஜநாயகம் நீள நெடுக பூத்தொடுத்தாற்போல் சொல்லிக் கொண்டே போனார், அல்லி தெருவை நோக்கி இருந்த ஜன்னல் கதவைப் பற்றிக்கொண்டு பதுமை போல் அசைவற்று நின்று கொண்டிருந்தாள். அப்போதைய நிலையில் ராஜநாயகத்தை நேருக்கு நேர் பார்ப்பதற்கு அவள் மனம் இசையவில்லை; அவளால் முடியவில்லை. எற்பாட்டை நிறுத்திவிடுவதாக அவர் இப்போது எதைக் குறிப்பிட்டுச் சொல்ல இருக்கிறது? கல்யாணத்தைத்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/117&oldid=1318496" இலிருந்து மீள்விக்கப்பட்டது