பக்கம்:ஆடும் தீபம்.pdf/124

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தீபம்

123


கைன்னு ஜொலிச்சு நட்சத்திரம்னு பேர் வாங்கறவங்களுக்குப் படத்திலேனன்னவேலை? உடம்பைக் காட்டி உதட்டை அசைக்கிறதுக்கு ஆயிரக்கணக்கான தொகை:

இது அதிசயம் இல்லீங்களா பலராமையா?”

பலராமையா என்ற சினிமாக்கம்பெனி முதலாளி ஒருவர் வந்திருக்கிறார்; அல்லி படத்தில் நடிக்க வேண்டும் என்று அவர் கேட்கிறார். ராஜநாயகம் அவரோடுபேசுகிறார்அல்லி இதைப் புரிந்து கொண்டாள்.ஆனால் வாத்தியாரையாவின் நோக்கம் என்ன? மறுப்பா,இணக்கமா?-அது புரியவில்லை. சற்று முன்புறம் சென்று உற்றுக் கேட்கத் தொடங்கினாள்.

பலராமையா லேசாக நகைத்தார். பிறகுசொன்னார்:

“நீங்க சொல்றதெல்லாம் ரொம்ப சரிதான் , ராஜநாயகம்; இந்த இடத்திலே நாம இன்னொரு விஷயத்தையும் கவனிக்கணும். அதுதான் பொதுமக்களோட ரசனை. இது தொழிலுக்கு முக்கியம்! இல்லீங்களா? அந்தப் பொண்ணு சூட்டிகை உள்ளது.படத்திலே அதுஆடின ஆட்டத்திலே, அதன் முகபாவத்திலே நான் அதைக்கண்டுக்கிட்டேன். அழகி படக்கம்பெனியாரும் சொன்னாங்க. அந்தப்பாத்திரத்துக்கு வேண்டிய வசனங்களை மட்டும் மனப்பாடம் செய்துவச்சிட முடியும்ங்கறநம்பிக்கை எனக்குஉண்டு.”* “எல்லாம் சரிதான்.ஆனாலும், அப்படியே இருந்தாலும் முதலிலே நான் சொன்னேனே அந்தத் தடையில்லமுக்கியம்...?’ ’

  • அல்லியோட கல்யாணத்தைப் பற்றித்தானே சொல்றீங்க? :

அல்லி பெருமூச்செறிந்தாள்.

“ஆமாம். இனிமே அல்லிக்கு நான் கார்டியன் இல்லே.’’